Home /News /tamil-nadu /

அமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள் மேல் ஆசையில்லை: உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள் மேல் ஆசையில்லை: உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

நான் அமைச்சர் துணை முதல்வர் பொறுப்பிற்கு ஆசைபடாதவன். கடந்த தேர்தலில் கோவை மக்கள் திமுகவுக்கு ஏமாற்றம் அளித்தீர்கள். மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் எங்களை ஏமாற்றி விடாதீர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    கோவையில் நடைபெற்ற திமுக  உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமில் பங்கேற்று பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்,  தான் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பொறுப்புகளுக்கு ஆசைப்படாதவன் என்று தெரிவித்தார்.

    திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி திமுக ஆட்சி அமைந்தபோதே அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று என்ற பேச்சு எழுந்தது. எனினும், அவர் எம்.எல்.ஏ.வாகவே தொடர்கிறார். இதற்கிடையே, உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சேகர்பாபு  உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் திமுகவில்  இளைஞர்கள் இளம்பெண்களை சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.  இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்றி உள்ளோம். இனிவரும் நோயையும் எதிர்கொள்வோம். பெட்ரோல் டீசல் விலை ,ஆவின் பால் விலையை முதல்வர் குறைத்துள்ளார்.

    தொகுதிக்கு 10,000 பேரை கழகத்தில் சேர்க்க வேண்டும் என இலக்கு தரப்பட்டு 24 லட்சம் பேரை இணைத்துள்ளோம்.  திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் சேர்ந்து 2கோடி பேரை திமுகவில் சேர்க்க வேண்டும் என்ற இல்க்கு தரப்பட்டுள்ளது. அதனை முடிக்க வேண்டும்.8 மாத சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று பேசினார்.

    இதையும் படிங்க: 8 வழிச்சாலை விவகாரம் : மக்களின் பக்கமா? மத்திய அரசின் பக்கமா? - திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி


    மேலும், ”நான் அமைச்சர் துணை முதல்வர் பொறுப்பிற்கு ஆசைபடாதவன். கடந்த தேர்தலில் கோவை மக்கள் திமுகவுக்கு ஏமாற்றம் அளித்தீர்கள். மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் எங்களை ஏமாற்றி விடாதீர்கள்” என்றும் அவர் கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி