Home /News /tamil-nadu /

சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தல்.. மலேசியாவை சேர்ந்தவர்கள் கோவையில் கைது

சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தல்.. மலேசியாவை சேர்ந்தவர்கள் கோவையில் கைது

தங்கம் கடத்தல்

தங்கம் கடத்தல்

Gold Smuggling | மலேசியா நாட்டை சேர்ந்த இருவர் தங்கம் கடத்தி வந்து கோவையில் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய 4.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மலேசிய நாட்டை சேர்ந்த இருவரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தை வெள்ளிகிழமை காலை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர்.  அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த மலேசிய நாட்டு பயணிகள் தங்கேஸ்வரன் மற்றும் நந்தினி ஆகிய இருவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனைக்கு உட்படுத்தினர்.



அப்போது அவர்கள் கொண்டு வந்த பைகளில்  2.26 கோடி மதிப்புடைய 4.2 கிலோ தங்கம் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து தங்கத்தை  பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கோவை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மலேசியா நாட்டை  சேர்ந்த இருவர் தங்கம் கடத்தி வந்து கோவையில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Coimbatore, Gold, Smuggling

அடுத்த செய்தி