Home /News /tamil-nadu /

ரூ.25 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய்... அட்டைபெட்டியை திறந்து பார்த்த நபருக்கு பேரதிர்ச்சி

ரூ.25 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய்... அட்டைபெட்டியை திறந்து பார்த்த நபருக்கு பேரதிர்ச்சி

கோவை செய்திகள்

கோவை செய்திகள்

Coimbatore District : ரியல் எஸ்ட்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மோசடி செய்ய திட்டமிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவையில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதாக கூறி அட்டைப்பெட்டியில் பிரஷ், சேவிங் ரேசர் போன்றவற்றை வைத்து மோசடி செய்த இருவரை ரேஸ்கோர்ஸ் போலிசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் உலர் பழங்கள் விற்பனை செய்து வருகின்றார். தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுக்காக எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருக்கு  செல்போனில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என  குறுஞ்செய்தி வந்துள்ளது.  இதனையடுத்து ஸ்ரீ தேவி அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அலுவலகம் காந்திபுரம் பகுதியில் இருப்பதாகவும், 25 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்தால் 1 கோடி ரூபாய் கடன் பெற்று கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம்  25ம்  தேதி வெள்ளிக்கிழமையன்று,தனது மகன் ரமணாவிடம் 10 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.

ரமணா கோவை காந்திபுரம் வந்த பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது கருப்பு பணம் என்பதால் அலுவலகத்தில் வைத்து கொடுக்க கூடாது எனவும் பிஷப் அப்பாசாமி கல்லூரி அருகில் காத்திருக்கும்படி தெரிவித்துள்ளனர்.பிஷப் அப்பாசாமி கல்லூரி அருகில் காத்திருந்த போது மார்டின் அமல்ராஜ் மற்றும் ஜனகன் என்கிற கௌதம் ஆகிய இருவரும் அட்டைபெட்டியுடன் வந்துள்ளனர்.

ரமணாவிடம் இருந்து பணத்தை வாங்கிய உடன் அட்டைபெட்டியை கொடுத்து விட்டு , காரில் வைத்து திறந்து பார்க்கும் படி கூறி விட்டு வேகமாக இரு சக்கர வாகனத்தில் கிளம்பி சென்றனர். பணம் கொடுக்க வந்தவர்களின் செயல்பாடுகளை பார்த்து சந்தேகம் அடைந்த ரமணா உடனே பெட்டியை திறந்து பார்த்த போது அதில் சேவிங் ரேசர்களும், டூத் பிரஸ்களும்  இருந்துள்ளது. இதனையடுத்து ரமணாவும்  அவருடன் வந்தவர்களும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டி சென்ற போது அவர்கள் தப்பி சென்றனர்.

ALSO READ |  அரசு மருத்துமனையில் சமூகநலத்துறை சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி
 இதனையடுத்து தொலை பேசி எண்ணுடன்  ரமணா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 25 லட்ச ரூபாய் கமிஷன் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டு சென்று விட்டதாக புகார் அளித்தார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டும் , தொலைபேசி எண்களை கொண்டும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவையை சேர்ந்தமார்டின் அமல்ராஜ், ஜனகன் என்கிற கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.




ரியல் எஸ்ட்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மோசடி செய்ய திட்டமிட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரமணாவிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மட்டுமே ஏமாற்றியதும் அதில் 4 லட்ச ரூபாயில் கடனை அடைத்து இருப்பதும் தெரிநவந்தது. இதனையடுத்து  மீதமுள்ள 6 லட்ச ரூபாயினை பறிமுதல் செய்த காவல் துறையினர், மார்டின் அமல்ராஜ் மற்றும் ஜனகன் என்கிற கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 10 லட்ச ரூபாய் மட்டும் இழந்து விட்டு 25 லட்ச ரூபாய் என  தவறான தகவல் கொடுத்த ரமணாவை அழைத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : சு.குருசாமி
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Coimbatore

அடுத்த செய்தி