கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தில் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தின் வாயிலில் இருந்த புனித செபஸ்தியர் சிலை கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் சேதப்படுத்தபட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் அந்த பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த நபர்கள் அந்த பகுதியில் சுற்றி வந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. இதனையடுத்து, இது குறித்து விசாரித்த போலீசார் அந்த அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் மதன்குமார் என்ற இளைஞர் இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மூர்த்தி மற்றும் தீபக் ஆகயோருடன் சேர்ந்து சிலையை உடைத்ததையும், இதில் தீபக் தேவாலயத்திக்குள் சென்று செபஸ்தியர் சிலையை உடைத்து இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தீபக் மற்றும் மூர்த்தி ஆகி இருவரையும் தேடி வருகின்றனர்.
Read More : குக்கரில் இருந்து எட்டிப்பார்த்த நல்ல பாம்பு - ஷாக்கான குடும்பத்தினர்
கைதான இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் மதன் குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாணவி மதமாற்ற விவகாரம் தொடர்பாக தற்கொலை விவகாரத்திற்கு எதிர் வினையாற்றும் விதமாக கோவை இராமநாதபுரம் டிரினிட்டி தேவாயலயத்தை சேதப்படுத்தியதாக பிடிபட்ட நபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
Must Read : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு... பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் சிறுவன் கூர்நோக்கு இல்லத்திலும் மதன்குமார் கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.