சீரியல் பார்த்த படி இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர்: வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு

சீரியல் பார்த்த படி இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர்: வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஆபத்தை உணராமல் செல்போனில் "ராஜா ராணி" சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனம்  ஓட்டிசென்ற நபரை இரு சக்கர வாகன எண்ணை வைத்து பிடித்த போக்குவரத்து காவல் துறையினர் அவருக்கு 1,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

  • Share this:
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில்  "ராஜா ராணி" சிரியல் பார்த்தபடி இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். தனது செல்போனில் சீரியல் பார்த்து ரசித்தபடி ஆபத்தை உணராமல்  இருசக்கர வாகனத்தை அந்த நபர்  வேகமாக இயக்கியபடி சென்றார். இதனை அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள்  சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது.

Also read: கோவை மாவட்ட ஆட்சியரை அதிமுக எம்.எல்ஏக்கள் அதட்டிய விவகாரம்: திமுகவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

ஒருகட்டத்தில், சமூக வலைதளம் மூலமாகவே போக்குவரத்து காவல் துறையினர் அந்த நபர் குறித்த தகவல்களை பகிருமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில்குமார், இது குறித்து விசாரிக்கும்படி போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,  இரு சக்கர வாகனத்தில் பதிவு எண் கொண்ட புகைபடம் சமூக வலைதளம் மூலமாகவே போலீசாருக்கு  கிடைத்தது. அந்த வாகன எண்ணின் அடிப்படையில் வாகன உரிமையாளரை தேடிய பொழுது, வாகனம் ஓட்டியபடி சீரியல் பார்த்த நபர் கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பதும், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முத்துசாமிக்கு ரூ.1,200 அபராதம் விதித்த கோவை போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த கூடாது என எச்சரித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே முத்துச்சாமியை  காவல்துறையினர் கண்டறிந்து, அவர் மீது  நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published: