Home /News /tamil-nadu /

கோவை குற்றாலத்துக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..

கோவை குற்றாலத்துக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..

கோவை குற்றாலம்

கோவை குற்றாலம்

குடும்பத்துடன் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் குற்றால அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு கொரோனா வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் வனத்துறையினர் அறிவுறுத்தல்

    கோவை ஆலந்துறை அடுத்த சாடிவயல் மலைப்பகுதியில் கோவை குற்றால அருவி உள்ளது இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் கிறிஸ்மஸ் மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு  விடுமுறை விட்டதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது 50 சதவிகித பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.பின்னர் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதை தவிர்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக சுற்றுலா பயணிகளை டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

    Also Read: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    அதேபோல சுற்றுலாப் வரும்போது முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதால் குடும்பத்துடன் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் குற்றால அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    செய்தியாளர்: சுரேஷ் ( கோவை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Coimbatore, Covid-19, Tourism, Tourist spots

    அடுத்த செய்தி