அரசியல் ஆதாயத்திற்காக உதவிகள் செய்வதாக கூறி குட்டையை குழப்பக்கூடாது - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் அட்வைஸ்

அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் ஒரு மாத காலத்தில் நோய் தொற்று 50 சதவீதமாக குறைந்திருக்கின்றது என அமைச்சர் பெரியகருப்பன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

  • Share this:
கோவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் நிவாரண உதவிகள் என்ற பெயரில்  அரசியல் ஆதாயத்திற்காக  குட்டையை குழப்பும் வேலையை  செய்ய கூடாது எனவும், நோயில் இருப்பவர்களுக்கு  உதவுகின்றேன் என்ற போர்வையில் நெருக்கடியை மக்களுக்கு ஏற்படுத்த கூடாது என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள தேஜஸ்வி கல்லூரியில் கொரோனா  சிகிச்சை மையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் இன்று  ஆய்வு மேற்கொண்டார். ஊரகபகுதிகளில் ஆய்வை முடித்த பின் அமைச்சர் பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆட்சி பொறுப்பேற்ற தினத்தில் இருந்து ஒரு மாத காலமாக கொரொனா தொற்றை தடுப்பதில்  இந்த அரசு முழு கவனம் செலுத்தி வருகின்றது எனவும் இதனால் தமிழகத்தில் ஒரு மாத காலத்தில் நோய் தொற்று 50 சதவீதமாக குறைந்திருக்கின்றது என தெரிவித்தார்.

Also Read: "நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்.." பெரம்பூரில் குடிபோதையில் கடைகளில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது

ஒரிரு வாரங்களில் கொரொனா இல்லலாத மாநிலமாக தமிழகம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்த அவர்,மத்திய அரசிடம் இருந்து  தமிழகத்தற்கு தேவையான  ஊசிகளை பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நகர் பகுதிகளில் மட்டுமில்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொற்று இருப்பதால் இன்று கிராமங்களில் மேற்கொள்ளபடும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது எனவும், அனைத்து தடுப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்த அமைச்சர் பெரியகருப்பன்,கோவை மாவட்டத்திலும் தொற்று பரவல் 50 சதவீதம் குறைந்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Also Read: கொரோனா பிணங்களை கையாளும் பணியில் ஆயுஷ் மருத்துவர்கள்; மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சர்ச்சை நடவடிக்கை!

கோவை மாவட்டத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதால் அரசியலாக்க முயல்கின்றனர் என கூறிய அவர்,தி.மு.க தலைவர் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பவர் இல்லை எனவும்,இரு முறை கோவை வந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

கோவையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நிவாரண உதவிகள், நோய்தடுப்பு பணிகள் என  அவர்களே நேரடியாக முயற்சிக்காமல் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த அவர்,அரசியல் ஆதாயத்திற்காக  குட்டையை குழப்பும் வேலையை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்  செய்ய கூடாது எனவும் தெரிவித்தார்.

நோயில் இருப்பவர்களுக்கு  உதவுகின்றேன் என்ற போர்வையில் மக்களுக்கு நெருக்கடியை கோவை மாவட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஏற்படுத்த கூடாது என தெரிவித்த அவர்,எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கின்றார் என்பதையும் நினைவுகூர்ந்தனர். தற்போது யுத்த காலத்தி்ல் இருப்பதால் கொரொனா தடுப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தப்படுகின்றது எனவும்,தேர்தல்காலத்தில் பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றபடும் என்றார்.கோவை மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக குறைத்து விடலாம் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். பேட்டியின் போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: