தேனுக்கு ஆசைப்பட்டு மர இடுக்கில் சிக்கிய கரடி: உயிரோடு மீட்ட தமிழக வனத்துறை அதிகாரிகள்!

கரடி மீட்பு

தேனை உண்பதற்காக கரடி ஒன்று மரத்தின் மீது ஏறியது. தேனை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதன் வலது கால்   மரப் போந்தில் சிக்கியது.  காலை வெளியே எடுக்க முடியாமல் கரடி அவதிப்பட்டது.

 • Share this:
  வால்பாறையில் மர இடுக்கில்  சிக்கித் தவித்த கரடியை தமிழக வனத்துறை அதிகாரிகள் உயிருடன் மீட்டனர்.

  கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். இங்கு தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. வனப்பகுதி என்பதால் வன விலங்குகளின் நடமாட்டமும் இங்கு அதிகம். இந்நிலையில், வால்பாறையில் உள்ள  வாட்டர்பால்ஸ் எஸ்டேட் முதல் பிரிவு 10-ம் நம்பர் தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்தில் தேனிக்கள் கூடு கட்டியுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் உள்ள தேனை உண்பதற்காக கரடி ஒன்று மரத்தின் மீது ஏறியது. தேனை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதன் வலது கால்   மரப் போந்தில் சிக்கியது.  காலை வெளியே எடுக்க முடியாமல் கரடி அவதிப்பட்டது. இதற்கிடையே, கரடியின் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் இது குறித்து  வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.


  மேலும் படிக்க: மதுபோதையில் தகராறு: வாலிபரை உயிரோடு மண்ணில் புதைத்த நண்பர்கள்!


  உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரக அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையிலான  வனத்துறையினர்  கரடிக்கு மயக்க மருந்து ஊசியை செலுத்தினர். பின்னர் மரத்தை வெட்டி அதனை வனத்துறையினர் மீட்டனர்.  இதை தொடர்ந்து கரடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  கரடி குணமடைந்ததை தொடர்ந்து காடம்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான கீழ் பூணாச்சி ஓடைப்பள்ளம் என்ற இடத்தில்  அதனை விட்டனர்.

  இதையும் படிக்க: கோவில் விவகாரத்தில் பிரச்னை: ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட 6 குடும்பங்கள்!

  Published by:Murugesh M
  First published: