அவுட்டு காய் வெடித்து யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கோவை தாணிக்கண்டி வனப்பகுதியில் தமிழக வனத்துறை சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில், கோவை வனச்சரகத்தில் - 3, போளுவாம்பட்டி வனச்சரகத்தில் - 3, சிறுமுகை வனச்சரகத்தில் - 2, வால்பாறைஇயல் -2, டாப்சிலிப் பகுதியில் ஒன்று என மொத்தம் 11 யானைகள் உயிரிழந்துள்ளது. இதில் பெருமளவு இளம் இளம் வயது யானைகளாக உள்ளது. அதேபோல் இயற்கைக்கு முரணாக மின்வேலியில் சிக்கி ஒரு ஆண் யானையும், அவுட்டுகள் கடித்து பத்து வயது பெண் யானையும் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் தமிழக வனத்துறை சார்பில் யானை உயிரிழப்பு குறித்து கண்காணிக்க தனியாக கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில், செயல் திட்ட அலுவலர் பத்மா, துணை வனப்பாதுகாவலர் சமர்தா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாசன் ஆகிய 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் இயற்கைக்கு முரணாக யானைகள் உயிர் இறக்கும் போது நேரடியாக களத்திற்கு சென்று உயிரிழப்பிற்கு காரணம், உண்மை களநிலவரங்களை பதிவு செய்ய உள்ளனர்.
அதேபோல் வனப்பகுதியில் ஒட்டியுள்ள கிராமங்களில் நேரில் சென்று இயற்கைக்கு முரணாக யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்த சிறப்பு குழு முதல் கட்டமாக கோவை தாணிக்கண்டி வனப்பகுதியில் அவுட்டுகாய் வெடித்ததில் பெண் குட்டியானை உயிரிழந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.
ALSO READ | டீசல் விலை 100 ரூபாயை கடந்தது, பெட்ரோல் விலையும் அதிகரிப்பு - இன்றைய (ஏப்ரல் 5-2022) நிலவரம்
மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு யானை உயிர் இறப்பிற்கான காரணங்கள் குறித்த அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்க உள்ளது. இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர், அசோக்குமார், கால்நடை மருத்துவர் சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : சுரேஷ் ( கோவை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant