தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என தெரிகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனிடையே, தமிழக்கத்தில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ., பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்து வருகிறார் அதிமுகவை சேர்ந்த எஸ்.பி.லேலுமணி. அந்த அளவுக்கு கோவை தொண்டாமுத்தூரில் வலிமையான அரசியல்வாதியாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி களமிறக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது, வேலுமணியின் ஊழல் புகார்களை பட்டியிலிட்டு தீவிரமாக அவரின் இமேஜை உடைக்க முயற்சித்து வந்தார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தொண்டாமுத்தூர் தொகுதியை திமுக கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த வந்த நிலையில், இந்த முறை நேரடியாக களம் இறங்கியுள்ளது. இதனால், தொண்டாமுத்தூர் தொகுதி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தபால் வாக்குகளில் தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சிவசேனாபதி பின்னடைவை சந்தித்துள்ளார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.