• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நடிகர் வடிவேல் காமெடி போல கோவையில் நடந்த சம்பவம்... டாஸ்மாக் திருட்டால் சிக்கிய திருடன்

நடிகர் வடிவேல் காமெடி போல கோவையில் நடந்த சம்பவம்... டாஸ்மாக் திருட்டால் சிக்கிய திருடன்

Youtube Video

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடிமகன் ஒருவர் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானத்தை திருட முற்பட்ட போது, 10 லட்சம் ரூபாய் பணத்தையும் கையோடு திருடிச் சென்றார், அவர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.

  • Share this:
    கோவையில் ஆர்.எஸ். புரம் லாலி ரோடு சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு ஏப்ரல் 24ம் தேதி சனிக்கிழமை வசூலான தொகை 10,72,000 ரூபாய் ரொக்கப் பணத்தை வைத்து விட்டு, மறுநாள் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பூட்டி விட்டுச் சென்றனர். ஏப்ரல் 26ம் தேதி ஊழியர்கள் கடைக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஒரு நபர், கையில் பையுடன் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

    அதன் அடிப்படையில் சீரநாயக்கன்பாளையம் எம்ஜிஆர் வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை ஆர்எஸ் புரம் போலீசார் கைது செய்தனர். மதுவுக்கு அடிமையான சதீஷ்குமார், ஏப்ரல் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் கைகள் நடுங்க தவித்துள்ளார். இரவில் தான் வழக்கமாக மது வாங்கும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபானங்களைத் திருடத் திட்டமிட்டார்.

    நள்ளிரவில் பூட்டை உடைத்தவர் கடைக்குள் சென்று தனக்கு பிடித்தமான ஓரியன் மதுவை கடைக்குள் வைத்தே ரசித்து குடித்துள்ளார். மேலும் சில மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே செல்ல முற்பட்ட போது தான் கல்லாப்பெட்டியை பார்த்தார்.



    கல்லாப்பெட்டிக்குள் இருந்த 10,72,000 ரூபாய் பணத்தை போதையில் எண்ணிப் பார்க்காமல் அள்ளிப் பையில் போட்டுக் கொண்டு வெளியேறினார். கடையிலிருந்து சற்று தூரம் சென்றவர் கடையை பூட்டாமல் வந்து விட்டோமே என்பது நினைவுக்கு வர மீண்டும் வந்து பொறுப்புடன் ஷட்டரை பூட்டிவிட்டு அச்சமின்றி சாவகாசமாக நடந்து சென்றுள்ளார்.

    மேலும் படிக்க... அமைச்சரவையில் தஞ்சாவூர் புறக்கணிப்பா? அதிருப்தி்யில் திமுகவினர்..

    திருடிய பணத்தை தாராளமாக செலவு செய்த சதீஷ்குமாரிடம் இருந்து 7,50,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.  ஒருநாள் ஊரடங்கால் மதுபானத்தை திருடத் துணிந்த சதிஷ்குமார், கல்லாப்பெட்டி கண்ணில் பட்டதால் களி தின்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: