மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’ என்றும், கைகளில் ’சிற்றரசு திமுக ஒழிக’ என்றும் எழுதியபடி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்த நபர் வேறு நபர்கள் வராததால் திரும்பி சென்றார்.
பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான மாரிதாஸ் சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தன் பேரில் மதுரை சூர்யாநகர் பகுதியை சேர்ந்த மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலி இ-மெயில் மூலம் அவதூறு கருத்துக்களை பரப்பிய வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அவரது நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’ என்றும் கைகளில் ’ஃபாரின் மதநெறி திமுக சிற்றரசு ஒழிக’, ‘எல்லா புகழும் நம் நாட்டிற்கே என்றும் எழுதியபடி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தார்.
ஆர்ப்பாட்டம் செய்ய வந்த கந்தசாமியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரித்த போது , ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்கவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ வரவில்லை எனவும், நான் எந்த கட்சியிலும் இல்லை. எந்த இயக்கத்திலும் இல்லை, இந்த நாட்டில் இந்து என்ற உணர்வில் தான் இருக்கிறேன் என தெரிவித்தார்.
மாரிதாஸ் நியாமாக பேசுவார் எனவும் தெரிவித்த அவரிடம், பந்தயசாலை காவல் துறையினர் விசாரித்த போது அங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வேறு யாரும் வராததால் திரும்பி சென்றார்.
Also read: திமுக குடும்பத்தை யார் விமர்சித்தாலும் குண்டர் சட்டம் பாய்கிறது- காயத்ரி ரகுராம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Coimbatore