Home /News /tamil-nadu /

மீண்டும் ஓடத்தொடங்கியது ஊட்டி மலை ரயில் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மீண்டும் ஓடத்தொடங்கியது ஊட்டி மலை ரயில் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி மலை ரயில்

ஊட்டி மலை ரயில்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 60 நாட்களுக்கு பின் மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண்சரிவால் சேதமடைந்த ஊட்டி மலை ரயில் பாதையில் சீரமைக்கும் பணி நிறைவடைந்தது. கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முதல் இந்த மாதம் 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை 60 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது 180 சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    Also Read: ரயில் இஞ்சினையே மோசடியாக விற்பனை செய்த ஊழியர் - ரயில்வேதுறையினர் ஷாக்

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கும் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கும் அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயிலை கடந்த 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில்  பரவலாக கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு - ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.

    Also Read:  பரோட்டா பிரியர்களே உஷார்.. பிரிட்ஜில் வைத்த 50 கிலோ பழைய புரோட்டா நெல்லையில் பறிமுதல்

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி முதல் நேற்றுவரை(21.12.21) சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்திருந்தது இதனைத்தொடர்ந்து மலைரெயில் இருப்புப்பாதை பிரிவு பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் மேற்பார்வையில் ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    ரயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள் வெடிவைத்து அகற்றப்பட்டன. ரயில் பாதையில் சரிந்த மண் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டன..  ரயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 60 நாட்களுக்குப் பின்னர் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று(22.12.21) தொடங்கியது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7:10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு சென்றது மலை ரயிலில் 180 சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    செய்தியாளர்:  எஸ்.யோகேஸ்வரன் (மேட்டுபாளையம்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Indian Railways, Mettupalayam, Nilgiris, Ooty, Railway, Train

    அடுத்த செய்தி