• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஜகவை சேர்ந்தவருக்கு ஒரே ஒரு ஓட்டு ; தேமுதிகவை சேர்ந்தவருக்க 2 ஓட்டு!

பாஜகவை சேர்ந்தவருக்கு ஒரே ஒரு ஓட்டு ; தேமுதிகவை சேர்ந்தவருக்க 2 ஓட்டு!

 ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்

ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்

கோவை வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் ஒரே ஓரு வாக்கு மட்டுமே பெற்றார்.

  • Share this:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பாஜகவை சேர்ந்த, சுயேச்சை வேட்பாளர்  1 ஓட்டும், தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர் 2 ஓட்டும் பெற்றனர்.

கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம்  குருடம்பாளையம் ஊராட்சி  9ஆவது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதில் திமுகவைச்  சேர்ந்த அருள்ராஜ் கட்டில் சின்னத்தில் போட்டியிட்டு, 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார். இதே போல பாஜகவைச் சேர்ந்த, அக்கட்சியின் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், கார் சின்னத்தில், சுயேச்சையாக போட்டியிட்டு இருந்த நிலையில் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.

இதே போல தேமுதிகவை சேர்ந்தவர் பெயின்டிங் பிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் 2 வாக்குகள் மட்டுமே பெற்றார். பாஜகவை சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் 4 ஆவது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவர் உட்பட அவரது  குடும்பத்தினர் யாருக்கும் அந்த வார்டில் வாக்குகள் இல்லை.

Must Read : ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

1551 பேர் கொண்ட 9 வது வார்டில் வாக்கே இல்லாத பாஜகவைச் சேர்ந்த கார்த்திற்கு ஒரே ஒருவரின் வாக்கு மட்டும் பதிவாகி இருப்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: