Home /News /tamil-nadu /

அதிகாரிகளை மிரட்டும் வேலையை விடுங்க.. அதிமுகவினருக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை

அதிகாரிகளை மிரட்டும் வேலையை விடுங்க.. அதிமுகவினருக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

அதிமுகவினர் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது சரியல்ல, வார்த்தைகளை கவனித்து பேச வேண்டும் என செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.

கோவையில் அரசு அதிகாரிகளை வார்த்தைகளில் மிரட்டும் தொணியை அதிமுகவினர் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் street art வரையும் நிகழ்வினை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது கோவை மாநகராட்சிக்கு  உட்பட்ட சாலைகள் மேம்பாட்டிற்காக 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த மாத இறுதிக்குள் 289 சாலை பணிகள் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பகுதியில் மேம்பாலங்கள், அரசு கட்டிடங்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டு பண்பாடு, கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள் வரையப்படும் என தெரிவித்த அவர், அரசு சுவர்களில் சுவரொட்டி இல்லாத வகையில் ஒவியங்கள் வரைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சுவர் ஓவியம்


Also Read:  சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை 3 மணி நேரம் முடக்கிய பெண்கள்.. அதிகாலையில் பரபரப்பு

அப்போது கோவையில் நேற்று நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க அரசு மீது வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், திமுக அரசு பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் 505 வாக்குறுதிகளில்  202 வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் இது ஒரு சாதனை எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிகழ்ச்சியும்  நடத்த முடியாத அளவிற்கு இருந்தது எனக்கூறிய அவர் இவற்றை மறைத்து விட்டு நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க-வினர் பேசி இருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் உச்சபட்ச கருத்துகளை வெளியிட்டு இருக்கின்றனர் எனக்கூறிய அவர்,அதிமுகவினர் விரக்தியின் அடிப்படையில் இப்படி பேசி இருக்கின்றனர். அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது சரியல்ல, வார்த்தைகளை கவனித்து பேச வேண்டும்,  முகம் சுளிக்காத அளவுக்கு பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். கடந்த கால நிகழ்வுகளை மறைத்து நேற்றைய கூட்டத்தில் பேசி இருக்கின்றனர் எனக்கூறிய அவர், மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

Also Read:  நெல்லை விபத்து: பள்ளி கல்வித்துறை அலட்சியபோக்கே காரணம் - ஓபிஎஸ் கண்டனம்

2013 ல் ஒப்புதல் பெற்ற  சாலைபணிகளை கூட அதிமுக ஆட்சியில் செய்ய வில்லை எனவும், மாநகராட்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சம்பளம் உட்பட வேறு பயன்காட்டிற்கு நிதியை  பயன்படுத்தி இருக்கின்றனர் எனவும் கூறிய அவர்,மாநகராட்சி ஒப்புதல் இல்லாமல் , டெண்டர் விடாமல் ஒதுக்கிய பணிகளை ரத்து செய்யாமல் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி


கோவையில் அரசு அதிகாரிகளை வார்த்தைகளில் மிரட்டும் தொணியில் பேசுவதை அதிமுகவினர் கட்டுப்படுத்த வேண்டும் எனவும்  இல்லையெனில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சோதனைக்கு அதிமுகவினர் மூன்று விதமான  முரண்பட்ட கருத்துகளை சொல்கின்றனர் எனக்கூறிய அவர் அவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

Also Read: தமிழ்த்தாய் வாழ்த்து: மனோன்மணியம் சுந்தரனார் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை

இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர் தங்கமணிதான் எனக்கூறிய அவர்,வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்த்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி  மீதான புகார் எனவும்,2006,2012, 2016,2021  தேர்தல்களில் தாக்கல் செய்த   சொத்து மதிப்பு பட்டியலை தங்கமணி வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார். தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி யாரெல்லாம் ஊழல் செய்து இருக்கின்றனரனோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, Coimbatore, DMK, MKStalin, Senthil Balaji, Tamil News, Tamilnadu

அடுத்த செய்தி