முகப்பு /செய்தி /tamil-nadu / தனித்தமிழ்நாடு பிரிவினை வாதம்.. ஆ.ராசா அத்தியாயம் முடிய போகிறது - சி.பி.ராதாகிருஷ்ணன்

தனித்தமிழ்நாடு பிரிவினை வாதம்.. ஆ.ராசா அத்தியாயம் முடிய போகிறது - சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை பாஜக போராட்டம்

கோவை பாஜக போராட்டம்

Coimbatore BJP Protest : பா.ஜ.கவிற்கு யார் வந்தாலும் இணைத்து கொள்வோம், ஸ்டாலின் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - சி.பி.ராதாகிருஷ்ணன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தனித்தமிழ்நாடு என்ற பிரிவினை வாதத்தை ஆ.ராசா கையில் எடுத்தால், அவருடைய அத்தியாயம் முடிய போகிறது என்று அர்த்தம் என பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை சிவானந்தா காலனியில் பா.ஜ.க சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

உண்ணாவிரத போராட்டம் துவங்கிய பின்னர் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் , தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  சி.பி. ராதாகிருஷ்ணன்,பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநிலம் முழுவதும்  நடைபெறும் போராட்டம் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டது என தெரவித்த அவர் இறையாண்மைக்கு ஆபத்து வரும் போது  தேசத்திற்கு பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தபட்டு இருப்பதாகவும், இராணுவத்திற்கு ஆட்களை எடுக்கவே மாட்டோம் என சொல்ல வில்லை, படித்து முடித்து விட்டு எதிர்காலத்தை பற்றி கவலையுடன் இருக்கும் இளைஞர்களுக்கு  தன்னம்பிக்கை கொடுக்கவும், தேச பக்தியை வளர்க்கவும் அக்னிபாத் திட்டம் பயன்படும் எனவும் தெரிவித்தார்.

Also Read: என்னை மன்னித்துவிடுங்கள் - புதிய வீடியோவில் TTF வாசன் உருக்கம்!

பிரதமர் மோடி எந்த ஒரு முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை ஏளனப்படுத்துவது, களங்கப்படுத்துவது  என திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றது என தெரிவித்த அவர், தாமரை பாரத தேசம் எங்கும் வளர்ந்து வருகின்றது, விரைவில் தமிழகத்திலும் தாமரை  மலரும் என தெரிவித்தவர், தற்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

திமுக ஓராண்டு கால ஆட்சியில் ,எதை சொன்னார்களோ அதை செய்யவில்லை. தாய்மார்களின் வாக்குகளை வாங்கவும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு  வந்து விடக்கூடாது என்பதற்காகவும் பெண்களுக்கு  ஆயிரம் ருபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள். 2 ஜி் பணத்தை வைத்து செலவு செய்யும் ஆ.ராசா  பிரிவினை வாதத்தை  கையில் எடுத்தால், அவருடைய அத்தியாயம் முடிய போகிறது என்று அர்த்தம் என எச்சரிக்கை விடுத்த சி.பி.ராதாகிருஷ்ணன்,அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவது நாகரீகமாக இருக்காது எனவும் தெரிவித்தார்.பாஜகவிற்கு  யார் வந்தாலும் இணைத்து கொள்வோம், ஸ்டாலின் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

First published:

Tags: A Raja, BJP, Coimbatore, CP Radhakrishnan, DMK