• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் விலியுறுத்தல்

சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் விலியுறுத்தல்

சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் விலியுறுத்தல்

சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் விலியுறுத்தல்

சூயஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி போட்ட குடிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

  • Share this:
கோவை மாநகராட்சியில் இருபத்தி நான்கு மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. இதை அப்போது திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தன. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சூயஸ் திட்டம் ரத்துச் செய்யப்படும் என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆட்சி அமைத்து 3 மாதங்களுக்கு மேலாகியும் சூயஸ் திட்டம்  குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதர சூயஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெரும்  ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியே வரும் நிலையில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த சூயஸ் நிறுவனம் 26 ஆண்டுகளுக்கு  குடிநீர் விநியோகம் செய்ய அனுமதி வழங்கி இருப்பது அபாயகரமானது எனவும், இந்த  குடிநீர் விநியோக திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எனவே சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என  காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Also read: அடைகாத்த கோழி போல பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி ஸ்டாலினால், தலைவராக முடியாது: அண்ணாமலை

கடந்த அதிமுக ஆட்சியில்  குடிநீர் விநியோகத்தை பிரான்சின் சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி டென்டர் வழங்கிய அதிமுக அரசின் நடவடிக்கையினை எதிர்த்து போராட்டம் நடத்தி இருப்பதாகவும் தற்போதும் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை துடியலூரில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கோவை மாநகராட்சியின்  குடிநீர் விநியோகதிற்காக சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த்தை  ரத்து செய்வதாக  தெரிவித்து இருந்ததாகவும்,தனது வாக்குறுதியை திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், இந்த சட்டமன்ற கூட்டத்தில் விவகாரத்திற்கு விடை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவிக்கின்றனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சூயஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனமுதல்வர் ஸ்டாலிடனிடம்  முறையிடுவோம் எனவும், தேவை ஏற்பட்டால் மக்களை திரட்டி போராட்டமும்  நடத்துவோம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை  திமுக தலைமையிலான அரசு படிப்படியாக நிறைவேற்றி வரும் நிலையில், கோவை மாநகராட்சி சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள  ஒப்பந்தம்  ரத்து செய்யப்படும் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமாஎன்ற  எதிர்பார்ப்பு கோவை மக்களின் எதிர்பார்ப்பாக  மட்டுமில்லாமல் திமுக  கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: