Home /News /tamil-nadu /

கடனை ஏற்கும்படி இந்தியாவிடம் இலங்கை கேட்பது நியாயமில்லை - அண்ணாமலை

கடனை ஏற்கும்படி இந்தியாவிடம் இலங்கை கேட்பது நியாயமில்லை - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Sri lanka | இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு இந்தியா மருந்து கொடுத்து வருகிறது - அண்ணாமலை

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது  பேசியவர், “ இலங்கையில்  நிலைமை மோசமாக இருப்பதாகவும், இலங்கைக்கு பக்கத்துக்கு நாடு என்கிற அடிப்படையிலும் தமிழக மக்களின் நலன் கருதியும் நாம் உதவி செய்கிறோம் என தெரிவித்தார்.

இங்குள்ளவர்கள் இலங்கையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். இலங்கை தமிழர்கள் கப்பல் மூலம் இந்தியா வரமுடியவில்லை. கொழும்பிலிருந்து , ஜவ்னாவிற்க்கு நிதி உதவி அளித்து ரயில் மூலம், விமான நிலையத்திற்கு வரவழைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது ஆனால்  தீர்வே இல்லாமல் இங்குள்ளவர்கள்  கத்தி கொண்டு இருக்கிறார்கள்.

Also Read:  இலங்கையில் வன்முறை - ஆளுங்கட்சி எம்.பி அடித்துக்கொலை

இலங்கைக்கு டீசல் ,பெட்ரோல் ,உணவு பொருட்கள்,மருத்துவ உதவி  உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளோம். இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு இந்தியா மருந்து கொடுத்து வருகிறது. இலங்கையில்  14 லட்சம் அரசு அதிகாரிகள் உள்ளனர், வருமானத்தில் 70 சதவீதம் அதிகாரிகளின் சம்பளத்திற்கே போய்விடுகிறது. யாழ்பாணம் தமிழர்கள் நலமாக இருக்க தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

.வடகிழக்கு பகுதியில் 46000 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது, மலையக பகுதி மக்களுக்காக 16000 வீடுகள் கட்டித்தந்துள்ளோம், இலங்கை கடனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இலங்கை, இந்தியாவிடம் கேட்பது நியாயமில்லை எனக் கூறினார்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Annamalai, BJP, Sri Lanka, Sri Lanka political crisis, Tamilnadu

அடுத்த செய்தி