• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • NEET Exam : நீட் தேர்வு காரணமாக கோவையில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

NEET Exam : நீட் தேர்வு காரணமாக கோவையில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

கீர்த்திவாசன்

கீர்த்திவாசன்

3ஆவது முறை நீட் தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்த நிலையில் கோவை மாணவர் கீர்த்திவாசன் விபரீத முடிவு.

  • Share this:
கோவையில் 3 முறை  நீட் தேர்வு  எழுதியும் தேர்ச்சி பெறாத நிலையில் இனி மருத்துவராக முடியாது என்ற மன உளைச்சல் காரணமாக மாணவர்  கீர்த்திவாசன் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். பள்ளி தேர்வுகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாணவர் கீர்த்திவாசன் 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட  நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற வில்லை. இந்நிலையில் 2021 ஆகஸ்ட் மாதம் நடந்த நீட் தேர்வினையும்  எழுதிய அவர், ரிசல்ட்டுக்காக காத்திருந்தார்.

தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனவருத்ததில் இருந்த  மாணவன் கீர்த்திவாசன், நேற்று விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர் கீர்த்திவாசன் பள்ளியில்  இரண்டாவது ரேங்க் வாங்குவார் எனவும், நீட் தேர்வு இந்த முறை நடக்காது என்று இருந்த நிலையில் மத்திய அரசு தேர்வை அறிவித்ததால் சரியாக தயாராகாமல் இருந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Must Read : School Holiday | கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரியிலும் விடுமுறை

3 ஆண்டுகளாக வேறு கல்லூரிக்கு செல்லாமல் நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக மாணவர் கீர்த்திவாசன் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். நீட்தேர்வு காரணமாக மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முத்தூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: