• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி கிடைத்தது.. 3 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்!

ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி கிடைத்தது.. 3 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்!

ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி கிடைத்தது.. 3 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்!

ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி கிடைத்தது.. 3 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்!

16 கோடி ரூபாய் ஊசி மருந்து இலவசமாக கிடைத்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு ரூ.9 லட்ச ரூபாய் தேவைப்படுவதால், 3 மாத குழந்தையின் பெற்றோர் தமிழக அரசை எதிர்பார்த்து காத்திருக்க்கின்றனர்.

  • Share this:
கோவையில் முதுகு தண்டுவட சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 3 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு  தேவையான 9 லட்ச ரூபாய் நிதியை அரசு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று கோரி குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரோமிலா. இந்த தம்பதியினருக்கு ஜேசன் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் உள்ளது. இதற்காக ரூ.16 கோடி மதிப்பிலான தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்த நிலையில், அமெரிக்க மருந்து நிறுவனம் குலுக்கல் முறையில் இந்த குழந்தைக்கு இலவசமாக அந்த தடுப்பூசியை சமீபத்தில் செலுத்தியது.

இந்நிலையில் குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பதால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த அறுவை சிகிச்சைக்கு 9 லட்ச ரூபாய் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் பெற்றோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கான நிதியை கொடுத்து உதவுமாறு மனு அளித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு மருத்துவ செலவாக 9 லட்சம் வரை ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில்,  எங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என்றும் அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் பலமுறை  இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளோம். எனினும், எந்த பதிலும்  கிடைக்காத நிலையில் மீண்டும் மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: