Home /News /tamil-nadu /

காவல்துறையினர் திமுகவுடன் சேர்ந்து தேர்தல் வேலை பாக்குறாங்க.. கோவையில் ஜனநாயகப் படுகொலை - எஸ்.பி. வேலுமணி தலைமையில் போராட்டம்

காவல்துறையினர் திமுகவுடன் சேர்ந்து தேர்தல் வேலை பாக்குறாங்க.. கோவையில் ஜனநாயகப் படுகொலை - எஸ்.பி. வேலுமணி தலைமையில் போராட்டம்

SP Velumani

SP Velumani

SP Velumani : கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அனைவரையும் கோவை மாவட்டத்திலிருந்து மாற்ற வேண்டும், கரூர் மாவட்டத்தில் இருந்து வந்த திமுகவினரை வெளியேற்ற வேண்டும், துணை இராணுவம்  தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என முன்னாள்  எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கோவை மாவட்டத்தில் இருக்கும் கரூர் மாவட்ட திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்கு துவங்கிய போராட்டம் 12 மணிக்கும் மேலாக நீடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏகளுடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அதிமுகவினர் மீது காவல்துறை பொய்வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் எனவும், கரூரில் இருந்து வந்து இருக்கும் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதுவரை ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் தெரிவித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக நியுஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை, கரூர் போன்ற இடங்களிலிருந்து ரவுடிகளை கொண்டு வந்து பொது மக்களையும் வேட்பாளர்களையும் மிரட்டுகின்றனர் என குற்றம்சாட்டினார். திமுக கொடுக்கும் பரிசு பொருட்களை காவல்துறையினர் ஜீப்பில் கொண்டு சென்று கொடுக்கின்றனர் எனவும், வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் பரிசுப் பொருட்களைக் நேரடியாக கொண்டு செல்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

அதிமுகவினர் மீது வேண்டுமென்றே வழக்கு போடப்படுகின்றது எனவும் தேர்தல் விதிமீறல் அனைத்து இடங்களிலும் நடக்கின்றது எனவும் தெரிவித்த அவர், காவல்துறை திமுக கட்சிக்காரர்களை போல செயல்படுவதால், தேர்தல் நடத்த துணை ராணுவப் படை கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கோவையில் பதட்டமான சூழல் நிலவுகின்றது எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். மேலும், மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் குண்டர்கள் வெளியேற்றப்பட வில்லை எனவும் தங்களுக்கு பயமாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Must Read : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது வேட்பாளர்கள், வாக்காளர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன?

கோவை மாவட்டம் அமைதியாக இருக்கும் சூழலை கெடுக்க பார்க்கின்றனர், காவல்துறையினர் திமுகவுடன் சேர்ந்து தேர்தல் வேலை பார்க்கின்றனர் என தெரிவித்த அவர், இந்த நிலை நீடித்தால் நாளை பொது மக்களை ஓட்டு போட விடமாட்டார்கள் எனவும், அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள் எனவும், கோவையில்  ஜனநாயகப் படுகொலை நடைபெறுகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.

Read More : திமுக-வுக்கு ஓட்டு கேட்டு சிக்கலில் சிக்கிய வெளிநாட்டு தொழிலதிபர்

கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அனைவரையும் கோவை மாவட்டத்திலிருந்து மாற்ற வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அப்போது தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வரும் போராட்டம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவியது.
Published by:Suresh V
First published:

Tags: Local Body Election 2022, SP Velumani

அடுத்த செய்தி