Home /News /tamil-nadu /

இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது - எஸ்.பி.வேலுமணி

இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறது - எஸ்.பி.வேலுமணி

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

SP Velumani : மொழிப்போரில்கோவை மாவட்டம் முக்கிய பங்காற்றி இருக்கின்றது என எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க தினத்தை முன்னிட்டு அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில்  தியாகிகள் புகைபடத்திற்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மொழிப்போரில் கோவை மாவட்டம் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றது எனவும், இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கின்றது என்றும் அதிமுக கொறொடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இன்று  தியாகிகள் புகைபடத்திற்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். வீரவணக்க நிகழ்விற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை  சந்தித்தார்.

அப்போது, மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழ்மொழிக்காக உயிரிழந்த வீர மறவர்களுக்கு தொடர்ந்து அதிமுக அஞ்சலி  செலுத்தி உரியமரியாதை வழங்கி வருகின்றது எனவும், மொழிப்போரில்கோவை மாவட்டம் முக்கிய பங்காற்றி இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில்  உயிரிழந்துள்ளனர் என தெரிவித்த அவர், பல்வேறு  போராட்டங்களை அண்ணா நடத்தியதால்  திமுக ஆட்சியை அமர்ந்த்து என்றும் அதனை தொடர்ந்து அதிமுக வீர மறவர்களுக்கு தற்போது வரை அஞ்சலி செலுத்தி வருகின்றது எனவும் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Read More : கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ1.64 கோடி மோசடி - கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்

பூலுவபட்டி பேரூராட்சியில் பிரதமர் மோடி புகைபடத்தை வைத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, வேலுமணி பதில் அளிக்காமல் தவிர்த்து விட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய கோவை கவுண்டம்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ அருண்குமார், முன்னாள் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வீட்டில் அவரை  களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக  தற்போதைய பொறுப்பு  அமைச்சரின் தூண்டுதலில் பேரில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுகின்றது எனவும், வரும் தேர்தலில் வெற்றியை பாதிக்கவும், அவரது தேர்தல்  பணியினை முடக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.

Must Read : இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

மேலும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை தற்போது ஒன்றிய செயலாளர் வரை இறங்கி உள்ளது என தெரிவித்த அவர், இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, Hindi, SP Velumani

அடுத்த செய்தி