கோவை மாவட்டம் கணியூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூரில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு கோவிலில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் கோவில் திருவிழாவில் கொங்கு பகுதியில் பிரசித்தி பெற்ற ஒயிலாட்டம் நடைபெற்றது. இதில் ஒயிலாட்ட நடன குழுவினருடன் இணைந்து எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடினார் . இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read : புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு சிறப்பாக அமல்படுத்தி வருகிறது - பாலகுருசாமி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.