Home /News /tamil-nadu /

தேர்தலை நடத்த விடாமல் திமுகவினர் அத்துமீறல் - எஸ்.பி.வேலுமணி புகார்

தேர்தலை நடத்த விடாமல் திமுகவினர் அத்துமீறல் - எஸ்.பி.வேலுமணி புகார்

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

Coimbatore : கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தேர்தலை நடத்த விடாமல்  திமுகவினர் அத்துமீறி நடந்து கொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கவுன்சிலர்களுடன் வந்து  புகார் அளித்தார்.

மேலும் படிக்கவும் ...
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று காலை திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பேரூராட்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாகஅதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வெள்ளளூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் 8 பேருடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் மற்றும் கோவை மாவட்ம ஆட்சியர் சமீரனிடம் ஆகியோரிடம் மனு அளித்தார்.

பின்னர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது கோவையில் வெளியூர் நபர்களை வைத்து திமுகவினர் வன்முறை நடத்துகின்றனர் எனவும், மிகப்பெரிய வன்முறையை தூண்டிவிட்டு, முறைகேடான வகையில் அதிமுகவின் வெற்றியை பறித்தார்கள் எனவும் குற்றம்சாட்டினார். இங்கு வெள்ளளூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்களை கத்தி, கம்புடன் வந்து தாக்கி இருக்கின்றனர், காரை சேதப்படுத்தி இருக்கின்றனர் என குற்றம்சாட்டிய அவர், இந்த தேர்தல் வன்முறைகள் கோவைக்கு  புதுமையாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.



தேவையில்லாமல் வெள்ளளூர் பேரூராட்சி தேர்தலை தள்ளி வைத்து இருக்கின்றனர் எனவும் இது  நியாயமே இல்லை எனவும் தெரிவித்தார். வெள்ளளூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரையும்  ஆட்சியர்  முன்னிலையில் நிறுத்தி இருக்கின்றோம் என தெரிவித்த அவர், அதிமுகவினரை தாக்கிவிட்டு திமுகவினர் காவல் துறையில்  பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர் எனவும், அடித்துவிட்டு  அவர்களே போய் பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Must Read : திமுக உறுப்பினர்கள் 'ராஜினாமா' செய்ய வேண்டும் - திருமாவளவன் ட்வீட்

வெள்ளளூர் பேரூராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, Coimbatore, Local Body Election 2022, SP Velumani

அடுத்த செய்தி