• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எஸ்.பி.வேலுமணி மீது புகார் கொடுத்த ஒப்பந்ததாரர் - பணம் கேட்டு மிரட்டுவதாக வேலுமணி சகோதரர் புகார்

எஸ்.பி.வேலுமணி மீது புகார் கொடுத்த ஒப்பந்ததாரர் - பணம் கேட்டு மிரட்டுவதாக வேலுமணி சகோதரர் புகார்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரர்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரர்

மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திருவேங்கடம் புகார் அளித்திருந்த நிலையில், வேலுமணியின் சகோதரர் பதில் புகார்

  • Share this:
சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  மீது  மோசடி புகார் அளித்த மாநகராட்சி ஒப்பந்ததாரர்  திருவேங்கடம்,  தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும், தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு கோரி மாநகர காவல் ஆணையரிடம்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சகோதரர் எஸ்.பி.அன்பரசன்  புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம். தாமோரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அண்ணன், எஸ்.பி.அன்பரசன் இன்று  தனது வழகறிஞருடன் வந்து புகார் அளித்தார். புகார் மனுவில்,  திருவேங்கடம் என்பவர் தனது தொழில் நொடித்துவிட்டதாகவும், மனைவியின் நகைகள், சொத்து என அனைத்தும் தொழிலுக்காக அடமானம் வைத்து நஷ்டம் அடைந்து விட்டதாகவும், 5 லட்ச ரூபாய் கொடுத்தால் நகைக்கு வட்டி கட்டி ஏலத்தை தவிர்த்து விடுவதாக கூறி தன்னிடம் கெஞ்சியதாக மனுவில் கூறியுள்ள அன்பரசன்.

Also Read:  தாலிபான்கள் மீது அச்சம்: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்த மக்கள்

தெரிந்தவர் என்ற அடிப்படையில் தனது சொந்த ஜாமினில் தெரிந்த நண்பர் மூலம் திருவேங்கடத்திற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்த நிலையில், தற்போது ரூபாய் ஒன்றரை கோடி கொடுக்க மிரட்டுவதாகவும், அதனால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், தன்னையும், தன் தம்பியுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மானத்தை வாங்கி விடுவதாக திருவேங்கடம் மிரட்டுவதாகவும், உண்மைக்கு புறம்பாக அவதூறான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read:  ஆப்கான் பரிதாபம்: டயரில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் பலி- வெளியாகும் பயங்கர வீடியோக்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது மாநகராட்சி ஒப்பந்ததாரர் திருவேங்கடம் , அரசு ஒப்பந்தப் பணிகள் தருவதாக கூறி ரூபாய் 1.20 கோடி வாங்கி கொண்ட வேலுமணி  மோசடி செய்ததாக புகார் அளித்திருக்கும் நிலையில் , தற்போது  திருவேங்கடம் மீது எஸ்.பி. அன்பரசன் புகார் அளித்துள்ளது குறிப்பிடதக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: