• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Coronavirus Impact | கோவை: ஊரடங்கால் போதுமான ஆர்டர்கள் வரவில்லை... இளநீர் கடையும், கரும்பு ஜூஸ் கடையும் வைத்து பிழைக்கும் சிறு தொழில் முனைவோர்கள்...

Coronavirus Impact | கோவை: ஊரடங்கால் போதுமான ஆர்டர்கள் வரவில்லை... இளநீர் கடையும், கரும்பு ஜூஸ் கடையும் வைத்து பிழைக்கும் சிறு தொழில் முனைவோர்கள்...

தொழில் செய்யும் இடத்தில் கரும்பு ஜூஸ் கடை போட்ட சிறு தொழில் முனைவோர் கனகராஜ்

தொழில் செய்யும் இடத்தில் கரும்பு ஜூஸ் கடை போட்ட சிறு தொழில் முனைவோர் கனகராஜ்

கோவையில் சிறு தொழில்கூடங்களில்  போதுமான ஆர்டர்கள் வராத நிலையில், சிறு தொழில் கூடத்திலேயே இளநீர் கடையும், கரும்பு ஜூஸ் கடையும் வைத்து சிறு தொழில் முனைவோர்கள் நடத்தி வருகின்றனர்.

  • Share this:
தொழில் நகரான கோவையில் சிறு , குறு தொழில் கூடங்கள் மட்டும் 30000க்கும் மேற்பட்டவை இயங்கிவருகின்றன. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, லாக்டவுன், மூலப்பொருள் விலை உயர்வு என  அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நெருக்கடிகளால் சிறு, குறு தொழில் கூடங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
இந்நிலையில் கோவை சேரன்மாநகரில்  நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் முனைவோர், கனகராஜ் தனது தொழில் கூடத்தின் முன் பகுதியிலேயே இளநீர் கடை, கரும்பு ஜூஸ் கடை போன்றவை அமைத்து வருவாய் ஈட்டி வருவதுடன் , தொழில் நெருக்கடியில் இருந்து மீள மாற்று வழியாக இதை பயன்படுத்தி வருகின்றார்.

அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கும் சிறு, குறுந்தொழில் முனைவோர் தவிக்கும் நிலையில் அதில் இருந்து தப்பிக்கவே இந்த கடைகளை போட்டு இருப்பதாகவும், இவற்றில் இருந்து ஒரளவு வருவாய் வருவதுடன் தொழிலில் ஆர்டர்கள் வராத இக்கால கட்டத்தில் சமாளிக்க முடிவதாக தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க... Today Rasi Palan: இன்றைய ராசிபலன் (ஏப்ரல் 28, 2021)

கோவை சேரன் மாநகர் பகுதியில் கே.எஸ்.நவீன் ரீவைண்டிங் ஒர்க்ஸ் என்ற பெயரில் ஒரு புறம் தொழில் கூடத்தை  இயக்கிக் கொண்டே மறுபுறம் இளநீர் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறார் தொழில் முனைவோர் கனகராஜ். இவர் மற்ற சிறு, குறு  தொழில் முனைவோருக்கும் நல்ல முன்னுதாரணமாக திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: