3 நிமிடத்தில் 50 திருக்குறள் ஒப்புவித்து கோவை மாணவி சாதனை...!

தமிழக முதல்வரிடம் சான்றிதழை காட்டி பாராட்டு பெற வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் பள்ளி மாணவி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரிடம் சான்றிதழை காட்டி பாராட்டு பெற வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் பள்ளி மாணவி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவையை சேர்ந்த சிவதர்ஷிணி என்ற பள்ளிமாணவி 190 விநாடிகளில் 50 திருக்குறள்களை ஒப்புவித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பி.என்.டி காலனி பகுதியை சேர்ந்த லிங்கமூர்த்தி -  பாலமகேஸ்வரி தம்பதியின் 15 வயது மகள் சிவதர்ஷினி. இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் 190 விநாடிகளில் (3 நிமிடம் 10 விநாடிகள்) திருக்குறளில் 5 அதிகாரங்களில் 50 திருக்குறள்களை ஓப்புவித்து இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ்  சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சின்னவயதில்  இருந்தே தமிழில்  ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாகவும்,பள்ளியில் நடைபெறும் பல்வேறு  நிகழ்வுகளில் பேச்சு , எழுத்து போட்டிகளில்  கலந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கும் மாணவி சிவதர்ஷிணி, சாதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே 50 திருக்குறள்களை வேகமாக ஒப்பிவிக்க பயிற்சி எடுத்தாகவும், 50 திருக்குறள்களை 2.30 நிமிடத்தில் சொல்லி முடிக்க முடியும் எனவும், ஆனால் தமிழுக்கு தெளிவும் உச்சரிப்பும் முக்கியம் என்பதால் 3 நிமிடம் 10 விநாடிகளில் ஒப்பிவித்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருப்பதாகவும், தமிழகமுதல்வரிடம் இந்த விருதை காட்டி வாழ்த்து பெற வேண்டும் என்பதுதான் தனது ஆசை எனவும் மாணவி சிவதர்ஷிணி தெரிவித்தார்.

Also read... அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல... - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மேலும் 1330 குறள்களையும் ஒரு மணி நேரத்தில் சொல்லி சாதிக்க வேண்டும் எனவும் முயற்சி செய்து வருவதாக மாணவி சிவதர்ஷிணி தெரிவித்தார்.

சிவதர்ஷிணி சிறு வயது முதலே தமிழில் ஆர்வமாக இருப்பார் எனவும்,  அதனால் அவளுக்கு தமிழில் தொடர்ந்து பயிற்சி அளிப்பதாகவும், ஒரு வாரபயிற்சியிலேயே இந்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்று விட்டதாவும்  மாணவியின் தாயார் பாலமகேஸ்வரி தெரிவித்தார் . பயிற்சியின் போது முதலில் நேரம் அதிகமாக எடுத்து கொண்ட நிலையில் தற்போது குறைவான நேரத்தில் சாதனை படைத்து இருப்பது மகிழ்வளிப்பதாகவும் மாணவியின் தாயார் பாலமகேஸ்வரி  தெரிவித்தார்.இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் திருக்குறளில் சாதித்த மாணவியை அழைத்து அவரை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
Published by:Vinothini Aandisamy
First published: