கோவை சிங்காநல்லூர் உட்பட நகரின் பல்வேறு பகுதியில் இரு சக்கர வாகன ஷோரும்களில் நிர்வாண கோலத்தில் திருடிய நிர்வாண திருடனை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர், அத்திப்பாளையம் பிரிவு உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களில் இரு சக்கர வாகன ஷோரும்களில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது. குறிப்பாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை மையத்தில் மூன்று லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதேபோல சரவணம்பட்டி காவல் நிலையத்திலும் திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில் ஷோரும்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நிர்வாண கோலத்தில் வந்து ஒருவர் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது நிர்வாணமாக சென்று ஷோரூம்களில் திருட்டில் ஈடுபட்டபவர் சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் தெருவை சேர்ந்த கோச்சடை பாண்டியன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஷோரூம்களில் மட்டும் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
கோவையில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரானா காரணமாக வேலையில்லாத நிலையில் கோச்சடை பாண்டியன் திருட்டில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.