கோவையில் விடுபட்ட நகராட்சி, பேரூராட்சிகளின் வளர்ச்சிக்கான திட்டமதிப்பீடுகள் தயாரிக்கபட்டு வருகின்றன, விரைவில் நிதிப்பெற்று வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும், கோவையில் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் கோவையில் விடுபட்ட நகராட்சி, பேரூராட்சிகளின் வளர்ச்சிக்கான திட்டமதிப்பீடுகள் தயாரிக்கபட்டு வருகின்றன, விரைவில் நிதிப்பெற்று வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
Must Read : தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரிப்பு
மேலும், கொரோனோவை பொறுத்தவரை கோவையில் அதிகரித்து வருகிறது இருப்பினும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினார்.
செய்தியாளர்: எஸ்.யோகேஸ்வரன், மேட்டுப்பாளையம் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.