• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிக மழை இருந்தாலும் அரசின் நடவடிக்கையால் பாதிப்புகள் குறைவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

அதிக மழை இருந்தாலும் அரசின் நடவடிக்கையால் பாதிப்புகள் குறைவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

  • Share this:
தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை அதிகமாக இருந்தாலும் அரசின் நடவடிக்கையால் பாதிப்புகள் குறைவு என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை வாலாங்குளம் பகுதியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்விற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை காரணமாக கோவையில் உள்ள 27 குளங்களில் 26 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன எனவும், ஒரு குளம் மட்டும் பாதி நிரம்பியுள்ளது என தெரிவித்த அவர்,
வாலாங்குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி மிக குறுகலாக இருக்கின்றது என்பதால் அதை மாற்ற சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கோவையில் 31 பகுதிகளில் மழைநீர் சூழந்துள்ளது எனவும் 7 பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதை அகற்ற உடனடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் எங்கும் மழைநீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாக பாதிப்பு இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், கோவையில் மின்சாரம் பாதிப்பு எங்கும் இல்லை எனவும், ஏதாவது ஒரு பகுதியில் மின் தடை இருந்தால் அதை உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு வந்தால் சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் முழுவதும் 150 இடங்களில் மக்கள்சபை நிகழ்வு மூலம் 1.41 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது எனவும், துறை வாரியாக மனுக்கள் பிரிக்கப்பட்டு அனுப்பபட்டுள்ளது எனவும் விரைவாக அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்த அவர், சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பாழடைந்து இருப்பதால் அதில் இருப்பவர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

கோவையில் சாலை வசதி மிக மோசமான நிலையில் இருக்கின்றது என தெரிவித்த அவர், இதை சரி செய்ய வேண்டும் என்பதுதான் மக்களின் பெரும்பாலான கோரிக்கையாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Must Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்... எந்தெந்த மாவட்டங்களில்?

வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு இருக்கின்றது எனவும், முதல்வரின் உத்திரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு செயல்பட்ட நிலையில், இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருந்தாலும் அரசின் நடவடிக்கையால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கின்றது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: