கோவை இருகூரை தலைமையிடமாக கொண்டு CWDS (சென்டர் பார் உமன் டெவலப்மென்ட் சொசைட்டி) என்ற அமைப்பை சரளாதேவி என்பவர் நடத்தி வந்தார். இவர் தனியாக சர்வலட்சுமி யூடியூப் சேனல் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருவதுடன் cwds அமைப்பில் சேர்வது தொடர்பாகவும் வீடியோ வெளிட்டு, அதற்கு தனியாக கட்டணம் வசூல் செய்து வந்துள்ளார்.
அந்த வீடியோக்களில் cwds மூலம் நாப்கின், கற்பூரம், மண்புழு உரம் தயாரித்தல் உட்பட 20 க்கும் மேற்பட்ட சுயதொழில்கள் துவங்க இயந்திரங்கள் வாங்கி தருவதாகவும் அந்த இயந்திரங்களில் தயாரிக்கப்படும் பொருட்களையும் தாங்களே வாங்கி கொள்வதாகவும் யுடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார்.
மேலும் நிறைய பார்வையாளர்கள் கொண்ட மற்ற யுடியூப் சேனல்களிலும் cwds மூலம் இயந்திரங்கள் வாங்கி தருவது குறித்து அந்தந்த யூடியூபர் மூலம் வீடியோக்கள் வெளயிட்டுள்ளார்.
சுய தொழில் செய்ய வேண்டும் என விருப்பத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆன்லைன் மூலம் சரளாதேவிக்கு பணம் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சரளாதேவி இருகூரில் இருந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுத்து இருந்த செல்போன் எண்களிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் பணம் செலுத்திய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் சரளாதேவியிடம் கொடுத்த பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், சரளாதேவி நம்பி பலரை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஏமாந்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சரளாதேவி நடத்தி வரும் CWDS நிறுவனத்திற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்கள் வேலுநாச்சியார் உட்பட மற்றவர்களை அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே CWDS அமைப்புக்கு ஆதரவாக யூடியூபில் வீடியோ வெளியிட்ட பல்வேறு யூடியூபர்களும் தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் தாங்கள் விளம்பரம் மட்டுமே செய்ததாகவும், தங்களுக்கும் இந்த மோசடிக்கு தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதேபோல பாதிக்கப்பட்டவர்கள் சென்னையிலும் இன்று புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவரத்தை காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும் பொழுது தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகார் அளிக்க முன்வருவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஆன்லைன் மோசடி நடைபெற்று இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, News On Instagram