Kovai SBI ATM Robbery | கோவையில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

Youtube Video

கோவை செல்வபுரத்தில் நள்ளிரவில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Share this:
    கோவை செல்வபுரம் ராமமூர்த்தி சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் அதிகாலை 2 மணி அளவில் நுழைந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை கல்லால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். இந்த தகவல் ஐதராபாத்தில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு கிடைத்தது. வங்கி அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கு இருந்து தப்பி சென்றார். செல்வபுரம் போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது ஏ.டி.எம் இயந்திரத்தின் கீழ்ப்பகுதியை உடைக்க முயன்றதும், அது திறக்காததால் அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க...யூடியூப் பார்த்து SBI ATM மையங்களில் ₹50 லட்சம் நூதன கொள்ளை

    அதில் அந்த மர்ம நபர் கல்லால் தாக்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனை வைத்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published: