ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவையில் 16வயது சிறுமி.. குமரியில் இளம்பெண் - ஆந்திராவுக்கு கடத்திய டியூசன் மாஸ்டர் அதிரவைக்கும் சம்பவம்

கோவையில் 16வயது சிறுமி.. குமரியில் இளம்பெண் - ஆந்திராவுக்கு கடத்திய டியூசன் மாஸ்டர் அதிரவைக்கும் சம்பவம்

சிறுமியை கடத்திய நபர்

சிறுமியை கடத்திய நபர்

Coimbatore : சிறுமி உட்பட  இரு  பெண்களுடன் ஆசிரியர் மணிமாறன் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய முடியாமல் இரு மாவட்ட தனிப்படை போலீசாரும்  தவித்து வந்தனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கோவை மற்றும் கன்னியாகுமரியில் பள்ளி மாணவி உட்பட இருவரை கடத்தி சென்ற சேலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் மணிமாறன் என்பவரை நீண்ட தேடுதலுக்கு பின்னர் திருப்பதியில் வைத்து  கோவை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம் பெண் ஆகிய இரு  பெண்களை மீட்ட போலீசார்,  கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிமாறனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். அரசு பள்ளி ஆசிரியராக இருந்த அவர்  ஒழுங்கீன நடவடிக்கையால் 2019 ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யபட்டார். இதனையடுத்து ஆத்தூரில் A to Z என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பொது மக்கள் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த அவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கினார். மேலும் அங்கிருந்த  நடன பள்ளியில் நடன ஆசிரியராகவும் பணியாற்றினார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையின்  பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கு  கணிதப்பாடம் டியூசன் எடுத்து உள்ளார்.

டியூசனுக்கு தினமும் சிறுமி வந்து சென்றுள்ள நிலையில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி ஆசிரியர்  மணிமாறன்  அவரை கடத்திச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் கடத்தல், போக்சோ உட்பட 4 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.ஏற்கனவே இரு முறை மணிமாறனுக்கு  திருமணமாகி இருந்ததும், 16 வயது சிறுமியை பொள்ளாச்சி, கொடைக்கானல் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரது படத்தை நோட்டீஸ் அடித்து தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் 16 வயது சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு  சென்ற மணிமாறன், புது மண தம்பதி எனக்கூறி அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் வீட்டின் உரிமையாளரின் 19  மகளுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண்ணையும் ஆசைவார்த்தை கூறி  அழைத்துக்கொண்டு மணிமாறன் தலைவானார். இதனையடுத்து வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக புகார் அளிக்கவே கன்னியாகுமரி மாவட்ட போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியையும், கன்னியாகுமரியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று  இருப்பது தெரியவந்தது.

Also Read: கருங்கல்லால் அதிர்ந்த குருவாயூர் ரயில்.. பதறிய ஓட்டுநர் - வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை

இதனையடுத்து கோவை, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் தனிப்படைகள் அமைத்து  விசாரணை நடத்தி வந்தனர். 2020 ஜூலை மாதம் முதல்  கோவை போலீசாரும் , அடுத்த சில மாதங்களில் கன்னியாகுமரி போலீசாரும் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்களையும் ஆசிரியரையும் தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமி உட்பட  இரு  பெண்களுடன் ஆசிரியர் மணிமாறன் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய முடியாமல் இரு மாவட்ட தனிப்படை போலீசாரும்  தவித்து வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் சமீபத்தில் அவரது தோழிக்கு  செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆசிரியர் பிடித்து வைத்துள்ளது குறித்து தெரிவிக்கவே உடனடியாக அவர், 19 வயது இளம் பெண்ணின் பெற்றோருக்கும் , காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.  இதனையடுத்து அந்த செல்போன் எண்ணின் மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பிடத்தை கண்டறிந்த கோவை தனிப்படை போலீசார் இன்று அதிகாலை ஆசிரியர் மணிமாறனை  கைது செய்து 16 வயது சிறுமி , 19 வயது இளம் பெண் ஆகிய இருவரையும் மீட்டனர்.

Also Read: காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவையை சேர்ந்த16 வயது சிறுமி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த  19 வயது இளம் பெண் ஆகிய இருவரையும் திருப்பதியில் தெரு தெருவாக டீ விற்க வைத்தது இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் ஆசிரியர் மணிமாறன் தற்போது போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார்.

அவரையும் , இரு பெண்களையும்  கோவை அழைத்து வந்த போலீசார் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பக்கத்து வீட்டில் வசித்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தியதுடன், கன்னியாகுமரியில் 19 வயது  இளம்பெண்ணையும் கடத்தி 8 மாதங்களாக எங்கு இருந்தார்கள் என்பது குறித்தும் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Crime News, Kanyakumari, Kidnap, Kidnapping Case, Sexual abuse