• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 2ஆம் தவணை ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை; இலவச மளிகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் தொடக்கம்!

2ஆம் தவணை ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை; இலவச மளிகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் தொடக்கம்!

டோக்கன் விநியோகம் தொடக்கம்

டோக்கன் விநியோகம் தொடக்கம்

15ம் தேதி முதல் இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

  • Share this:
கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண தொகை மற்றும் 14 மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு ஆகியவை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் துவங்கியுள்ளது. வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், 2 தவணையாக ரூ.4000 வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, முதல் தவணையாக ரூ.2000 மே மாதத்தில் வழங்கப்பட்டது. இதனிடையே, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், வருமானம் இல்லாமல் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தவகையில், 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாம் கட்ட நிவாரண தொகை ஆகியவை வழங்க ஏற்கனவே டோக்கன் கொடுக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களால் அவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 15 ம் தேதி முதல் இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,423 ரேஷன் கடைகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது. இந்த ரேசன் கார்டுதாரர்களுக்கு, ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்றும், அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில்  வைத்தும் டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.

Also read: Tasmac: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள்: கொரோனா குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு?

ரேஷன் கடை ஊழியர்கள் முக கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 200 பேர் வீதம் ரேஷன் கடைகளுக்கு வந்து நிவாரண தொகை மற்றும் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து டோக்கன் விநியோகம் செய்வது தங்களுக்கு வசதியாக இருப்பதாகவும், கூட்ட நெரிசலில் சிக்க தேவை இல்லாத சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று முதல் வரும் 14 ம் தேதி வரை டோக்கன் விநியோகமானது செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: