முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவையில் மாயாமான 10-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு

கோவையில் மாயாமான 10-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கோவை சரவணம்பட்டி அருகே காணாமல் போன பள்ளி சிறுமி,  5 நாட்களுக்கு பின்பு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்  இருந்து முட்புதரில் அழுகிய நிலையில் சடலமாக மீட்  மீட்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :

கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம்  பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 ம் தேதி சனிக்கிழமை பள்ளி சென்ற  சிறுமி வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என புலியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து மாணவியை  தேடிவந்தனர்.

Also Read : திண்டுக்கல்லில் பள்ளி மாணவி எரித்துக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

இந்நிலையில் இன்று காலை மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கும்  முட்புதர் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக  அப்பகுதி மக்கள் துப்புறவு பணியாளர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்த போது கை,கால்கள்,கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், பெட்சீட்டில் சுற்றப்பட்டு சிறுமியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின் பேரில்  அங்கு விரைந்த சரவணம்பட்டி  காவல்துறையினர் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.

Also Read : கள்ளக்காதலியுடன் தனிக்குடித்தனம்... தேடிவந்த கணவரை பார்த்ததும் 5வது மாடியில் இருந்து குதித்த உயிரைவிட்ட இளைஞர் 

top videos

    மேலும்  மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்தும் மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Coimbatore, Online crime