முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு

மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு

மலைப்பாம்பு

மலைப்பாம்பு

ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பத்திரமாக மருதமலை ஆணை மடுகு என்ற வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவையில் ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிப்பட்டது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் மணல்காடு என்ற பட்டா காட்டில் ஆடு மேய்க்கப்பட்டு கொண்டிருந்த போது மேய்ந்து கொண்டிருந்த ஆட்டில் ஒரு ஆட்டுக்குட்டி காணாமல் போயுள்ளது.  அதனையடுத்து ஆடு மேய்ப்பவர் ஆட்டுக்குட்டியை தேடிச் சென்ற போது புதர் ஒன்றின் அருகிலுள்ள பள்ளத்துள்ளுக்குள் சுமார் 12 அடி மலைபாம்பு ஒன்று ஆட்டுக்குட்டியை சுற்றியவாறு இருந்துள்ளது.  அதிர்ச்சியடைந்த ஆடு மேய்ப்பவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Also Read: கடைசியாக பார்த்து சென்ற காதலி..உருக்கமாக கடிதம் எழுதிவைத்து உயிரைவிட்ட இளைஞர்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் தன்ராஜ் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புதருக்குள் இருந்த ஆட்டுக்குட்டியை பாம்பின் பிடியில் இருந்து மீட்டனர். பாம்பு இறுக்கியதில் ஆட்டுக்குட்டி உயிரிழந்தது.

பிடிப்பட்ட பாம்பை பத்திரமாக மருதமலை ஆணை மடுகு என்ற வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த மலைப் பாம்பு கடந்த வாரங்களில் இரண்டு ஆட்டுக்குட்டி மற்றும் மயிலை கொன்று உணவாக உட்கொண்டது என்பது தெரியவந்தது.

செய்தியாளர் : சுரேஷ் ( கோவை)

First published:

Tags: Coimbatore, Forest, Python, Snake