நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை கண்டித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினர்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்சியினர் பல தரப்பில் போராட்டங்கள் நடத்தி வந்தனர். நீட்டை நிராகரித்து மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கிற மாதிரியான சட்டம் ஏற்றப்படும் என்ற வாக்குறுதியை அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வழங்கியிருந்தது.
தற்போதைய தமிழக அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து பரிந்துரை பெற்று சட்ட முன்வடிவை இயற்றி ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியிருக்கிறது. ஆனால் ஆளுநர் அவர்கள் இந்த சட்ட முன்வடிவின் மீது நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும், இந்த முன் வடிவத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதே ஆளுநருடைய ஒரே பொறுப்பு அதை அவர் தவறிவிட்டார் என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக நடப்பதாகவும் பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டினர்.
Must Read : ஜனவரி 17ம் தேதி அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
எனவே, உடனடியாக தமிழக அரசு ஆளுநருக்கு வழங்கிய சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி பிரதமர் தலைமையில் இருக்கிற மத்திய அமைச்சரவை அவருக்கு உரிய பரிசீலனை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டதாக மாணவர்களுக்கான கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் : ம.சக்திவேல், பொள்ளாச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet Exam, Protest, Tamil Nadu Governor