ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அத எப்பவவோ பிரிச்சாச்சே.. வானதி சீனிவாசன் அறியாமையில் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளார் - கோவை எம்.பி விமர்சனம்

அத எப்பவவோ பிரிச்சாச்சே.. வானதி சீனிவாசன் அறியாமையில் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளார் - கோவை எம்.பி விமர்சனம்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Coimbatore : பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து 16 ஆண்டுகளுக்கு முன்பே கோவை பிரிக்கப்பட்ட நிலையில் , தற்போது பிரிக்க கோரி ரயில்வே அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு கொடுத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

16 ஆண்டுகளுக்கு முன்பே பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவை பிரிக்கபட்டு சேலம் ரயில்வே கோட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை  தனியாக  பிரிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடம்  பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மனு அளித்து இருப்பதை கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலம் ரயில்வே கோட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற முக்கிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கோவை ரயில் நிலையம் சேலம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டாலும் பொள்ளாச்சி, கிணத்துகடவு போன்ற பகுதிகள் இது வரை சேலம் கோட்டத்தில் இணைக்கப்பட வில்லை.

இவற்றை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என 2007 முதல் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வுமான வானதி சீனிவாசன்,  மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்விடம் மனு அளித்தார். அதில், கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும், பொள்ளாச்சி -திருச்செந்தூர் ரயிலை பாலக்காட்டுக்கு பதிலாக கோவை அல்லது மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்பன உட்பட ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.  இந்த மனு மற்றும் ரயில்வே அமைச்சருடன் இருக்கும் புகைபடங்களை டிவிட்டரில் வானதி சீனிவாசன் பதிவேற்றம் செய்து இருந்தார்.

பி.ஆர்.நடராஜன்

இந்நிலையில் சிபிஎம்-ஐ  சேர்ந்த கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், வானதி சீனிவாசனை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோயமுத்தூர் தனியாக பிரிக்கப்பட்டு சேலம் கோட்டத்தில் கடந்த 2006ஆம் ஆண்டே இணைக்கப்பட்டு விட்டதாகவும், உண்மை நிலவரம் தெரியாமல் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவையை பிரிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை  சந்தித்து மனு அளித்து வந்து இருப்பது வானதி சீனிவாசனின் அறியாமையை காட்டுகின்றது எனவும் தெரவித்துள்ளார்.

Read More : சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்த வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் சசிகலா?

சேலம் ரயில்வே கோட்டம் அமைந்த பின்னும்  கோயமுத்தூர் ரயில் நிலையத்திற்கு உரிய கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதால் கோவையை தனி ரயில்வே கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுத்துள்ளது எனவும், பிரச்சனை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமலும்,  இது குறித்து அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்காமலும் அரைகுறை தகவல்களோடு , மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்து வந்து இருப்பது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையாது என குறிப்பிட்டுள்ளார்.

Must Read : படிப்பை தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்... சான்றிதழ்கள் உக்ரைனில் சிக்கிவிட்டன - தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை

மேலும், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது கூடுதல் பொறுப்புடன் இருப்பது அவசியம் எனவும் வானதி சீனிவாசனை, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: BJP, CPM, Southern railway, Vanathi srinivasan