கோவை வெள்ளலூர் பேரூராட்சியில்
திமுக அதிமுக கவுன்சிலரகள் இடையே இன்று காலை மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பதட்டமான சூழல் உருவானதை தொடர்ந்து இன்று காலை பேரூராட்சி தலைவர் தேர்தல் மறு உத்திரவு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலானது நடைபெற்றது. துணைத் தலைவர் தேர்தலுக்கு அதிமுக சார்பில் கணேஷ் என்பவரும், திமுக சார்பில் பவித்ரா என்பவரும் போட்டியிட்டனர். துணைத்தலைவர் தேர்தல் துவங்கியது முதலே திமுக , அதிமுக இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டமான சூழல் நிலவியது.
இந்நிலையில் தேர்தல் அலுவலக வளாகத்திலிருந்து வாக்குப் பெட்டியினை அரசியல் கட்சியினர் தூக்கி வெளியில் வீசினர். இதனை தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியதை தொடர்ந்து தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் தேர்தல் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Must Read : கடைசியில் காய்நகர்த்திய உடன்பிறப்புகள்.. வேதனையில் கூட்டணி கட்சிகள் - சங்கடத்தில் திமுக தலைமை
அப்பொழுது மீண்டும் தேர்தல் அலுவலகத்திற்குள் சென்ற திமுகவினர் வாக்கு பெட்டியை தூக்கி சாலையில் வீசினர். வாக்கு சீட்டுகளையும் கிழித்து எறிந்தனர். இதனை தொடர்ந்து பதட்டமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளளூர் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்.
Read More : திமுகவை சேர்ந்த 2 பேர் மனுதாக்கல்... சாலை மறியல் - பூந்தமல்லி நகராட்சி தேர்தல் நிறுத்தி வைப்பு
15 வார்டுகள் கொண்ட வெள்ளலூர் பேரூராட்சியில் திமுக 6, சுயேட்சை 1, அதிமுக 8 என கவுன்சிலர்கள் இருப்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.