திமுக கூட்டணியில்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று காலை நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மனோகரன் என்பவர் போட்டியிட்டார். 27 கவுன்சிலர்கள் கொண்ட கருமத்தம்பட்டி நகராட்சியில், 22 வாக்குகள் பெற்று திமுகவை சேர்ந்த மனோகரன் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியம் 22 வாக்குகளை பெற்றார்.
இந்நிலையில் கருமத்தம்பட்டி திமுகவினரின் இந்த செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் திமுகவினருக்கு கட்சித்தலைமையிடம் இருந்து சில அறிவுறுத்தல்கள் வந்த்தாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, கருமத்தம்பட்டி 6வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரை திமுகவினர் அவசர அவசரமாக துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தினர். இன்று பிற்பகல் நடைபெற்ற துணைதலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் யுவராஜ் 22 வாக்குகள் பெற்று துணைதலைவராக தேர்வானார்.
Read More : திமுகவை சேர்ந்த 2 பேர் மனுதாக்கல்... சாலை மறியல் - பூந்தமல்லி நகராட்சி தேர்தல் நிறுத்தி வைப்பு
கூட்டணி அறத்தை மீறி கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் பதவியை தட்டிப்பறித்த திமுகவினர், ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சமரசப் படுத்துவதற்காக துணைத் தலைவர் பதவியை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Must Read : திமுக உறுப்பினர்கள் 'ராஜினாமா' செய்ய வேண்டும் - திருமாவளவன் ட்வீட்
கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 19 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் என திமுக கூட்டணி 21 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 3, சுயேட்சை 3 பேர் என வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த நகராட்சி தேர்தலில் அதிமுக கவுன்சிலர்களும் பங்கேற்று வாக்களித்தது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.