Home /News /tamil-nadu /

இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் பார்க்கிறார்கள் - ஆளுநர் முன்னிலையில் பொன்முடி பேச்சு!!

இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் பார்க்கிறார்கள் - ஆளுநர் முன்னிலையில் பொன்முடி பேச்சு!!

 பொன்முடி

பொன்முடி

Minister Ponmudi on Hindi: புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விசயங்களை பின்பற்ற மாநில அரசு தயாராக  இருக்கின்றது எனவும், ஆனால் மாநில கல்வி கொள்கையினையே தமிழக அரசு பின்பற்றும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விசயங்களை பின்பற்ற மாநில அரசு தயாராக  இருக்கின்றது எனவும், ஆனால் மாநில கல்வி கொள்கையினையே தமிழக அரசு பின்பற்றும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். நாங்கள் இந்திக்கு  எதிரானவர்கள் அல்ல எனவும் இந்தி திணிப்பு வேண்டாம் என்பதையே வலியுறுத்துவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பல்கலைகழக விழா மேடையிலேயே  பொன்முடி கூறினார்.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று  நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்  ஆகியோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் 1687 முனைவர் பட்ட மாணவர்களுக்கும், பல்கலை கழக அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களுக்கு பட்டங்களும் தங்க பதக்கங்களும் நேரடியாக வழங்கப்பட்டன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும்,  1,50,424 இளநிலை பட்டங்கள், 1504 எம்.பில் பட்டங்கள், 48,034 முதுநிலை பட்டங்கள் என மொத்தம் 2,04,362 மாணவர்களுக்கான பட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இருக்கும் துறையில் அவர்கள்  முன்னேற வேண்டும் என்பதற்காக ‘நான் முதல்வன் திட்டத்தை’ தமிழக முதல்வர் செயல்படுத்துகின்றார் என தெரிவித்தார்.

பட்டம் பெறும் 2,40,445  பேரில் அதிகபட்சம் பெண்கள் இருக்கின்றனர் என தெரிவித்த அவர், ஆளுநர் அடிக்கடி பாரதியார் பாடல்களை சொல்லுவார் என குறிப்பிட்டார். கல்வித்துறைக்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றார் எனவும், கல்வி, தொழில் துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து படிக்கும் போதே அனுபவங்களை பெற  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

பெண் பட்டதாரிகள் ஆண்களை விட அதிகம் என தெரிவித்த அவர், பெண்கள் படிக்கவே கூடாது என்று சொன்ன காலம் உண்டு, இன்று பெண்களை படிக்க வைக்கின்றார்கள். இதுதான் திராவிட மாடல், பெரியார் மண் என தெரிவித்தார். மேலும், நாங்கள் மொழிகளுக்கு எதிரானவர்கள் இல்லை, இந்தி எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்பு வேண்டாம் என்பதையே கவர்னரின் கவனத்திற்கு சொல்கின்றோம் என தெரிவித்தார். அப்போது மாணவர்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

இந்தி குறித்து அமைச்சர் பொன்முடி:

தொடர்ந்து பேசிய பொன்முடி, எந்த மொழியையும் கற்க தயாராக இருக்கின்றோம், அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்தார். சர்வதேச மொழியான ஆங்கிலமும், தாய் மொழியான தமிழ் மொழியும் எங்களிடம் இருக்கின்றது எனவும், இந்தி திணிப்பிற்கு அண்ணா சொல்லிய குட்டிய கதையை கூறிய பொன்முடி, இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா


புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விசயங்களை பின்பற்ற தயாராக இருக்கின்றோம் என தெரிவித்த அவர், தமிழக அரசு  மாநில  கல்வி கொள்கையினையே பின்பற்றும் என தெரிவித்த அவர், நாங்கள் எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றோம் எனவும் தெரிவித்தார். இந்தி தேர்வு மொழியாக மட்டுமே  இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

Must Read : தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கு பல திட்டங்களை இந்த அரசு  செயல்படுத்துகின்றது என தெரிவித்த பொன்முடி, பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை தேடுவதை விட, வேலை தருபவர்களாக வருவதுதான் உண்மையான வளர்ச்சி எனவும் தெரிவித்தார். எங்கள் பிரச்சினைகளையும், எங்கள் மாணவர்களின் பிரச்சனையும் உணர்ந்து, ஆளுநர் செயல் பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா


மேலும், கல்வி கொள்கையினை ஆய்வு செய்து புதிய பாட திட்டங்களை கொண்டு வரும் போது தமிழக ஆளுநர் உதவுவார் என நம்புகின்றோம் என்றும், பாடம் நடத்தும் ஆசிரியர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அப்போது வலியுறுத்தினார்.
Published by:Suresh V
First published:

Tags: Hindi, Ponmudi, RN Ravi

அடுத்த செய்தி