Home /News /tamil-nadu /

பொங்கல் தொகுப்பு : டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?

பொங்கல் தொகுப்பு : டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?

Pongal Gift

Pongal Gift

Ration Shop | Pongal Gift | டோக்கன் முதலிலேயே கொடுப்பதால் கூட்ட நெரிசலில் இருந்து தவிர்ப்பது, நிச்சயம் பரிசு பொருட்கள் கிடைக்கும் என்பது உறுதியாவதாக  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்காக கோவையில் பொதுமக்களுக்கு  டோக்கன் விநியோகம் செய்யும்  பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி ,கோதுமை, வெல்லம் ,நெய், முந்திரி, கரும்பு உட்பட 21  விதமான பொருட்களை  வழங்கப்பட உள்ளது. இதற்காக பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு பேக்கிங் செய்யப்படும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ரேஷன்கடைகளில்  பொருள்களை அளவிட்டு அவற்றை ரேஷன் கடை ஊழியர்கள் பேக்கிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை வாங்க வரும் வகையில் திட்டமிட்டு, அதற்கான தேதியுடன் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Also Read : சாட்டை துரைமுருகன் மீதான குண்டர் சட்டம்; திமுக அரசின் அதிகார வெறியாட்டம்

டோக்கன் முதலிலேயே கொடுப்பதால் கூட்ட நெரிசலில் இருந்து தவிர்ப்பது, நிச்சயம் பரிசு பொருட்கள் கிடைக்கும் என்பது உறுதியாவதாக  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாளை துவங்கும் இந்த பணி பொங்கல் வரை நடைபெற இருக்கிறது. டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதி குறிப்பிட்ட தினத்தில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், பத்தாம் தேதிக்கு மேல் வாங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Pongal Gift, Ration Shop

அடுத்த செய்தி