பொள்ளாச்சி பகுதியில் தன் காதலியை பார்க்க சென்ற தலித் இன இளைஞரை தோட்டத்தில் கட்டிவைத்து அடித்து சித்தரவதை செய்த விவகாரத்தில் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் ஹரிஹரசுதாகர். இவர் அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே தோட்டத்தில் பணிபுரியும் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஹரிஹரனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ஹரிஹரன் அங்கு பணிக்கு செல்லாமல் வேறு தொழிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்ததை கண்ட தோட்டத்து உரிமையாளர் ஹரிஹரனின் உறவினர்களிடம் கூறி இனிமேல் பேச கூடாது என மிரட்டி வந்துள்ளனர்.
Also Read: 28 லட்சத்தைக் கடந்த மொத்த கொரோனா பாதிப்பு- இன்று மட்டும் 12,895 பேர் பாதிப்பு
மீண்டும் மீண்டும் இருவரும் தொலைபேசியில் பேசியதால் ஹரிஹர சுதாகரனை தனது தோட்டத்திற்கு அழைத்து வருமாறு தோட்டத்து உரிமையாளரான ராமசாமி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது காதலியை பார்க்க ஹரிஹர சுதாகரன் ராமசாமியின் தோட்டத்துக்கு சென்றுள்ளார் அங்கு இருந்த தோட்டத்து கணக்குப்பிள்ளை கேசவன் மற்றும் தொழிலாளியான காளிமுத்து ராமன் மற்றும் அங்கு பணிபுரிந்த வடமாநில இளைஞர்கள் இருவரும் மற்றும் தோட்டத்து உரிமையாளரான ராமசாமி ஆகியோர் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் இளைஞரை தோட்டத்திலிருந்து வெளியே விடாமல் இரவு முழுவதும் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதன்காரணமாக அந்த இளைஞர் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் அவரை அங்கிருந்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். உடலில் காயங்களுடன் வீட்டிற்கு வந்த இளைஞரை விசாரித்த அவரது தந்தை குமார் ஆனைமலை காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.
Also Read: இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்... வல்லுனர்கள் கணிப்பு
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் தோட்டத்து உரிமையாளராக ராமசாமி மாற்றம் கணக்குப்பிள்ளை கேசவன் உள்ளிட்ட 6 பேர் மீது பொள்ளாச்சி அனமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் :ம.சக்திவேல் ( பொள்ளாச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Love issue, Lovers, Pollachi, Youths