• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சூடு பிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒரு இளைஞரை கைது செய்தது சிபிஐ 

சூடு பிடிக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மேலும் ஒரு இளைஞரை கைது செய்தது சிபிஐ 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான இளைஞர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான இளைஞர்

பொள்ளாச்சி விவகாரத்தில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 

  • Share this:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருண்குமார் என்ற இளைஞரை சிபிஐ நேற்று கைது செய்தது. இதனையடுத்து பாலியல் வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 2019 ம் ஆண்டு கல்லூரி மாணவியை  காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரில் பொள்ளாச்சி  காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக இளைஞர்கள் சிலரை பிடித்து விசாரித்த போது பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் , வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ்குமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்த நிலையில், இதன் பின்னணியில் அரசியல் கட்சியினர் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் , வழக்கு  சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

Also Read:  அதிவேகமாக வந்த இனோவா கார்.. தடுப்புச்சுவரை தாண்டி விபத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுக மாணவரணி பொறுப்பாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அருளாணந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்த  நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம் எனவும், அவர்களின் பெயர், அடையாளம் வெளியிடப்படாது என சிபிஐ உறுதியளித்த நிலையில் இதுவரை 9 பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக வாக்குமூலமும் கொடுத்துள்ளனர்.

உயர்நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கு விசாரணை மெதுவாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அருளாணந்தத்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் செப்டம்பர் மாதம் முதல் பொள்ளாச்சி பாலியல் வழக்கை தினமும் நடத்தி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. மேலும் சிபிசிஐடியில் உள்ள முத்தரசி என்ற எஸ்.பியை சிபிஐக்கு மாற்றவும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தவும் உத்திரவிடப்பட்டது.

Also Read:  உன் மகன் உயிருக்கு ஆபத்து.. விதவை பெண்ணிடம் நூதன மோசடி - போலி சாமியாரை பிடித்து கொடுத்த மக்கள்

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞரை   சி.பி.ஐ இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் தலைமையிலான குழுவினர் நேற்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைத்தனர் .இதன் மூலம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கைதான அருண்குமார் நடிகர், நடிகைளுடன் எடுத்துக்கொண்ட புகைபடங்களும் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் சிபிஐ அதிகாரிகள் முகாம்

மேலும் சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு செப்டம்பர் மாதம் முதல் தினசரி விசாரணையை துவங்க இருக்கும் நிலையில் , இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: