கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணி முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் ஆகிய 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பிய படி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ள திமுகவினர் கோவையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும், தேர்தல் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த 2006ம் ஆண்டு சென்னையில் மாநகராட்சி தேர்தலின்போது கையாண்ட நடவடிக்கைகளை திமுகவினர் தற்பொழுதும் செய்து வருவதாக குற்றம்சாட்டினர்.

பொள்ளாச்சி ஜெயராமன்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெறும் என தெரிந்து கொண்டு கடந்த 3 தினங்களாக திமுகவினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார். கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அரசியல் அநாகரீகமான பேச்சை பேசி இருப்பதாகவும் "வேலுமணிக்கு சாவுமணி" என்று பேசி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
Must Read : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது வேட்பாளர்கள், வாக்காளர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன?
ஒரு எதிர்க்கட்சி கொறடாவை சாவுமணி அடிப்பேன் என்று சொல்லியிருப்பதன் நோக்கம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் என கூறிய அவர், கரூர் மாவட்ட திமுகவினரை கோவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அவரையும் இங்கிருந்து மாற்ற வேண்டும் எனவும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.