கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழயார் அணையில் இருந்து வெளியேறிய முதலைகள் கரையோர பகுதிகளில் உலாவுவதால் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும். 1964 மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் நீர் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாசன விவசாய மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 72 அடியாக காணப்படுகிறது. ஆழியார் அணை கட்டி முடிக்கப்பட்ட பொழுது 6 முதலை குட்டிகள் கொண்டுவந்து அணையில் விடப்பட்ட நிலையில் தற்பொழுது 58 வருடங்கள் கடந்த நிலையில் ஆணையில் முதலைகள் ஏராளமாக உள்ளன.
ஆனால் இன்று வரை எவ்வித பிரச்சினையும் ஆழியார் அணையில் ஏற்பட்டதில்லை. தற்பொழுது நீர் மட்டம் சரிந்துள்ள நிலையில், அணை சாலையோர பகுதியில் பழைய வால்பாறை சாலை அருகே இரண்டு முதலைகள் கரையோரத்தில் உலா வருவதை கண்ட பொதுப்பணித்தறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இதனால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகள் குறித்து ஆழியார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: சக்திவேல் - பொள்ளாச்சி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.