பூட்டிய வீட்டை டார்க்கெட் செய்து கொள்ளையடிக்கும் தம்பதி கைது..! - போலீசிடம் சிக்கியது எப்படி?

திருட்டு சம்பவத்தில் கைதான தம்பதி

சமீபத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்த  ராமு தனது மனைவி இந்துராணியுடன் பல்லடம் அருகே வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

  • Share this:
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே பூராண்டான்பாளையம் கிராமத்தில் 18 சவரன் நகை திருடப்பட்ட வழக்கில்,  கைரேகைகளை வைத்து பழைய குற்றவாளியையும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை இந்த தம்பதியினர் வழக்கமாக வைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் உள்ள பூராண்டான் பாளையம் கிராமத்தில் கடந்த ஜூலை 5 ம் தேதி பரமேஸ்வரி என்பவரது வீட்டில் 18 சவரன் தங்க நகை திருடப்பட்டது. வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை திருடப்பபட்டது தொடர்பாக சுல்த்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Also Read: பெண் தோழியிடம் பேசுவதை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்த புதுப்பெண்! - மகள் சாவுக்கு தோழி மீது குற்றம்சாட்டும் தாய்!

இந்நிலையில் அந்த வீட்டில் பதிந்த கைரேகைகளை பதிவு செய்த போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். பதிவு செய்யப்பட்ட கைரேகைகளை , பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஆய்வு செய்தபோது, கோவை வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ராமு என்பவரது கைரேகையுடன் ஒத்துபோனது . சமீபத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்த  ராமு தனது மனைவி இந்துராணியுடன் பல்லடம் அருகே வசித்து வந்ததும்  விசாரணையில் தெரிய வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத்தொடர்ந்து வீட்டில் பதிவான கைரேகை  அடிப்படையில் , சுல்த்தான் பேட்டை போலீசார் பல்லடம் வீட்டிலிருந்த ராமு மற்றும் அவரது மனைவி இந்துராணி ஆகிய இருவரையும்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகை மற்றும் 52 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Also Read: பெண் ஊராட்சி மன்ற தலைவரை சாதி ரீதியில் திட்டி வம்பிழுத்ததால் பதற்றம்!

போலீசாரின் விசாரணையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிள் மூலம் கிராமங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு,  அந்த வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதை  வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கணவன் மனைவி இருவரையும் சூலூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்கள் இருவரையும்  சிறையில் அடைத்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: