வயிற்றுவலியால் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் தாய் அதிர்ச்சி..

மாதிரிப்படம்

சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து மருத்துவர்கள் பொள்ளாச்சி மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 • Share this:
  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததால் மருத்துவர்கள் மற்றும்  சிறுமியின் தாய் அதிர்ச்சி.

  பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுமி ஒருவர், தன் தந்தை இறந்த சூழ்நிலையில், தாயின் அரவணைப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  Also Read: நகைக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த பெண்; எதுவும் தெரியாதது போல் இறுதி சடங்கில் நாடகம்; தஞ்சையில் பயங்கரம்!

  இந்நிலையில், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
  இதையடுத்து மருத்துவர்கள் பொள்ளாச்சி மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில், சிறுமியின் வீட்டின் அருகே உள்ள 49 வயதான குருசாமி என்ற மாற்றுத்திறனாளி தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி குருசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் சிறுமி மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை நீதிமன்றம் மூலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி) 


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: