இ-பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை...!

மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர்

போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறையிடம் இருப்பதாகவும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை, ஈரோடு மாவட்ட சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு தொடர்ந்து வருவதாகவும், இ பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை என மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.

கோவை சீரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சோனு சூட் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்பின்சார்பில் கொரொனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்யும் சேவை துவக்க விழா நடைபெற்றது. இந்த துவக்க விழா நிகழ்வில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் கலந்து கொண்டு, இந்த இலவச சேவையை துவக்கி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரிய மற்றும் சிறிய அளவிலான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் தொற்று காரணமாக ஆக்ஸிஜன் தேவைபடுபவர்களுக்கு வாகனம் மூலமும், இரு சக்கர வாகனம் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்று உயிர் காக்க உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த அமைப்பு கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும், இந்த இலவச சேவையை வழங்கும் நிலையில் தமிழகத்தில் கோவையிலும் துவங்கியுள்ளது. இந்த சேவையை துவக்கி வைத்த மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் , பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், ஆக்சிஜன் தேவை அதிகம் இருக்கும் நிலையில், இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் இந்த சேவை இருக்கும் நிலையில் கோவையில் தன்னார்வ அமைப்பினர் இந்த சேவையை துவங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.கோவை, ஈரோடு மாவட்ட சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு தொடர்ந்து ஈடுபட்மு வருவதாகவும், இ பாஸ் இல்லாமல் வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் அனிமதிக்க படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

Also read... 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்?

மருத்துவமனைக்கு செல்வதற்கும், ஊசி போடுவதற்கும் பொது மக்கள் வெளியில் வருகின்றனர் எனவும் அதனால் வாகனங்கள் அதிகமாக சாலையில் இருப்பது போல தெரிகின்றது எனவும், அனைத்து இடங்களிலும் வாகனங்களில் வரும் பொதுமக்களிடம் எங்கு செல்கின்றனர் என்பதை விசாரித்துதான் அனுப்புகின்றோம் எனவும் காவல் துறை விசாரிக்க தயங்குவதில்லை எனவும், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் காவல் துறையிடம் இருப்பதாகவும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: