முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘இ-பாஸ் இல்லனா திரும்பி போங்க..’ கேரள எல்லையில் போலீசார் கண்டிப்பு!

‘இ-பாஸ் இல்லனா திரும்பி போங்க..’ கேரள எல்லையில் போலீசார் கண்டிப்பு!

இ-பாஸ் சோதனை

இ-பாஸ் சோதனை

இ-பாஸ் நடைமுறையால் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், எனவே எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சில தளர்வுகள் அளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

  • Last Updated :

கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதியில் , பொள்ளாச்சி அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணித்து வருவதுடன், இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

கேரளா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வர பல்வேறு கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் கேரளாவிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வருபவர்களை தீவிர சோதனை செய்தும், இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே தமிழாக எல்லைகுல் அனுமதித்தனர்.

மேலும் இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை மீண்டும் கேரளாபகுதிக்குள் திருப்பி அனுப்பினர்.

இதனிடையே தமிழக கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வர இ-பாஸ் நடைமுறையால் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், எனவே எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சில தளர்வுகள் அளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

top videos

    செய்தியாளர் சக்திவேல், பொள்ளாச்சி

    First published:

    Tags: E Pass, Kerala, Zika Virus